நாட்டின் ஜிடிபியில் 10சதவீதம் வைத்துள்ள அம்பானி..!

நாட்டின் ஜிடிபியில் 10சதவீதம் வைத்துள்ள அம்பானி..!
X

முகேஷ் அம்பானி 

ஆசிய பசிபிக் பகுதியில் உள்ள பார்க்லேஸ் வங்கி, இந்தியத் தனியார் நிறுவனங்களின் வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பார்க்லேஸ் - ஹுருன் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மிகவும் மதிப்புமிக்க வணிகக் குழுமங்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குழுமம் தான், ரூ. 25.75 லட்சம் கோடி மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.

இரண்டாவது இடத்தில், ரூ. 7.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடன் நீரஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குழுமமும், ரூ. 5.39 லட்சம் கோடி மதிப்புடன் பிர்லா குழுமம் மூன்றாவது இடத்திலும் உள்ளது.

முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்களின் மதிப்பானது, கிட்டத்தட்ட சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ. 38.27 லட்சம் கோடிக்கு சமமான மதிப்பீட்டைக் கொண்டிருப்பதாக அறிக்கை கூறுகிறது.

அவர்களுக்கு அடுத்ததாக, ரூ. 4.71 லட்சம் கோடி மதிப்பில் ஜிண்டால் குழுமம் 4 ஆவது இடத்திலும், ரூ. 4.30 லட்சம் கோடி மதிப்புடன் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா தலைமையிலான நாடார்கள் குழுமம் 5 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். முதல் பத்து இடங்களில் இடம் பிடித்த ஒரே பெண்ணாக, நாடார்கள் குழுமத்தின் தலைவர் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா வலம் வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து, மஹிந்திரா & மஹிந்திரா குழுமம் 6 ஆவதாகவும், ஆசிய பெயிண்ட்ஸ் குழுமம் 7 ஆவதாகவும், வகில் குழுமம் 8 ஆவதாகவும், ராஜீவ் சிங் தலைமையிலான டிஎல்எஃப் குழுமம் 9 ஆவதாகவும், முருகுப்பா குழுமம் 10 ஆவது இடத்திலும் உள்ளன.

அடுத்ததாக, முதல் தலைமுறைப் பட்டியலில், கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் ரூ. 15.44 லட்சம் கோடி மதிப்பீட்டில் முதலிடத்தைப் பிடித்தார். ரூ. 2.37 லட்சம் கோடியுடன் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இரண்டாவது இடத்திலும், ரூ. 91,200 கோடி மதிப்புடன் மருந்து நிறுவனமான திவி குழுமம் 3 ஆவது இடத்திலும் உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்