மோடியை வரலாறு எப்படி பதிவு செய்யும்? வரலாற்று தலைவர்கள் வரிசையில்..!

மோடியை வரலாறு எப்படி பதிவு செய்யும்?  வரலாற்று தலைவர்கள் வரிசையில்..!
X

பிரதமர் மோடி (கோப்பு படம்)

ரஷ்யாவுக்கு ஒரு ஸ்டாலின், அமெரிக்காவுக்கு ஒரு கென்னடி, சீனாவுக்கு ஒரு மாசேதுங், இந்தியாவுக்கு ஒரு மோடி என காலம் எழுதி கொண்டிருக்கின்றது.

மோடியின் ரஷ்ய பயணம் பற்றி பல தகவல்கள் வெளிவந்தாலும் மிக முக்கிய செய்தியாக ரஷ்யாவில் இருந்து நிலம் வழியாக ஈரானை தொடர்பு கொண்டு, அங்கிருந்து இந்தியாவினை தொடர்பு கொள்ளும் திட்டம் தான் முக்கியமானது. இது மத்திய ஆசியாவில் இந்திய ஆதிக்கத்தை ஓங்கச் செய்யும் மற்றும் சூயஸ் கால்வாய் கடல்வழியின் முக்கியத்துவத்தை குறைக்கும்.

இரண்டாவது முக்கிய விஷயம் தான் இன்றைய மகா முக்கிய செய்தி. அது ரஷ்யாவின் கிழக்கு துறைமுகத்தில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வந்து இந்தியாவின் கிழக்கு கடற்கரை நகரங்களை மகா முக்கியமாக மேம்படுத்துவது தான்.

இந்தியாவின் வர்த்தகம் பெரும்பாலும் மேற்கு கடற்கரைக்கே பலனளிப்பவை. மேற்குலக கப்பல்கள் இன்னும் அராபிய எண்ணெய் எல்லாம் மேற்கு பக்கமே வருவதாலே சூரத், பம்பாய் என மகா முக்கிய பொருளாதாரக் கேந்திரங்கள் அப்பக்கமே உருவாயின‌.

பிரிட்டிசார் காலத்துக்குப் பின் இந்தியாவின் கிழக்கு கடற்கரை அதாவது கல்கத்தா, விசாகபட்டனம், சென்னை ஆகியவை அவ்வளவுக்கு முக்கியத்துவமில்லாமல் போயின. கொழும்பை சுற்றி இந்தியாவினை எட்டிப் பார்க்காமல் செல்லும் கப்பல்கள் ஒருபுறம் என்றாலும் கிழக்கு கடற்கரையில் கச்சா எண்ணெய் இறக்குமதி இல்லை என்பதும் இன்னொரு விஷயம்.

இங்கிருந்து தான் விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு மோடி மாபெரும் நல்வழியினை காட்டியுள்ளார். அவரின் மிகசிறந்த சர்வதேச அணுகுமுறை சரியான நேரத்தில் தேசத்துக்கு நல்வழி காட்டியிருக்கின்றது.

பாரதம் உலகத்தில் ஒரு நாடு என்பதால் உலகளாவிய நெருக்கடிக்கு அதுவும் தப்ப முடியாது. உலக பாதிப்புகளெல்லாம் தேசத்தை தாக்கியே தீரும். அதனை திறமையாக சமாளிப்பது தான் தேசிய அரசின் கடமை. அது திறமையும் கூட‌.

அவ்வகையில் உக்ரைன் போரினால் எண்ணெய் விலை உலக சந்தையில் கணிசமாக எகிறியிருக்கின்றது, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வரலாறு காணா விலை உயர்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவிலும் அது உயரவேண்டும். ஆனால் ஏற்கனவே எண்ணெய் விலை உச்சத்தில் இருக்கும் நாட்டில் இன்னும் உயர்த்த மோடி அரசு விரும்பவில்லை.

காரணம் அது மக்கள் நலமுள்ள அரசு, அரசியலைத் தாண்டி அவர்களுக்கு மக்கள் அபிமானம் எப்பொழுதும் அதிகம். இன்னொரு அரசாக இருந்தால் நிச்சயம் இந்திய பெட்ரோல் விலை 150 ரூபாயினை தாண்டியிருக்கும். உலக நிலவரம் அப்படி. ஆனால் உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய நிலைப்பாடு காரணமாக மோடி அரசுக்கு இதில் ஒரு வாய்ப்பு அழகாக உருவாகின்றது அல்லது முன் கூட்டியே அவர் செய்த தீர்க்கதரிசனமான முடிவு.

மோடி அரசு உலக அரங்கில் ரஷ்யாவின் பிடியில் இருந்து தன்னை விடுவித்து அதனை தனக்கு ஏற்ற வகையில் பாவித்துக் கொண்டது. அதாவது முந்தைய காங்கிரஸ் அரசுகள் ரஷ்யாவின் முழுபிடியில் சிக்கியிருந்தன. ரஷ்யா இன்று உக்ரைன் போரில் தூர வீசி எறிந்து கொண்டிருக்கும் பழைய ஆயுதங்களை இந்தியா தலையில் அன்று கட்டிவைத்து பெரும் பணம் பார்த்துக் கொண்டிருந்தது. இந்தியாவின் அணிசேரா கொள்கை முதல் பாகிஸ்தானின் அமெரிக்க நெருக்கம் வரை ரஷ்யாவுக்கு சாதகமாய் இருந்தது.

மோடி அரசு அணிசேரா கொள்கையினை கடாசிவிட்டு இந்தியாவுக்கு எது நல்லதோ அதை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெற்றுக் கொள்ள துணிச்சலாக முடிவெடுத்தது. சுமார் 60 ஆண்டுகால ரஷ்ய பிடியில் இருந்து வெளிவந்தது. இந்தியாவுக்கு நாங்கள் விரும்பியதெல்லாம் தருவோம். இந்தியா வாங்கி தீரவேண்டும் எனும் மிரட்டலில் இருந்து விலகி இந்தியாவுக்கு தேவையானதை மட்டும் வாங்குவோம் என ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது மோடி அரசு.

ரஷ்யாவிடம் இருந்து கவனமாக தேவைப்படும் ஆயுதங்களை மட்டும் வாங்கிய இந்தியா, இதர நாடுகளிலும் வாங்கியது தன்சொந்த உற்பத்தியில் இறங்கியது. அப்படியே அரபு நாடுகளை மட்டும் சாராமல் ரஷ்யாவில் இருந்தும் எண்ணெய் வாங்க ஒப்பந்தமிட்டது.

ஆம், ரஷ்யா தன் பழைய காயலான் கடை குடோனாக , பழைய இரும்பு கடையாக மட்டும் பார்த்த ரஷ்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்து அதன் ஆயுதங்களை குறைத்து வாங்கி எண்ணெயினை அதிகம் பெறும் வர்த்தகத்துக்கு மோடி அரசு மாறிற்று. இதனால் இரு அனுகூலங்கள் நிகழ்ந்தன‌.

முதலாவது ரஷ்ய ஆயுத இறக்குமதி குறைந்தது. இன்னொரு எண்ணெய் சந்தையினை தேசம் தன்னிறைவு பெற்றது. அதுவரை இந்தியாவுக்கு தங்களை விட்டால் யாருமில்லை என இறுமாந்திருந்த அரபுநாடுகள் இந்தியா எனும் பெரும் சந்தையினை இழக்க விரும்பாமல் இறங்கி வந்தன. இன்று அரபுலகில் இந்திய செல்வாக்கு அதிகம் இருக்கின்றது.

இந்த திட்டத்தில் தான் முன்பு மோடியும் புதினும் ரஷ்யாவின் கிழக்கு நகரமான விலாடிவோஸ்டாக் நகரில் எண்ணெய் ஒப்பந்தம் செய்தனர். இதில் இன்னொரு அழகான திருப்பத்தை நாட்டுக்கு கொடுத்தார் மோடி. ஆம் அரபுலகில் இருந்து அரபிக்கடல் வழியாக‌ எண்ணெய் கப்பல் அதிகம் வருவதால் மும்பை குஜராத் உள்ளிட்ட மேற்கு கடற்கரைகள் வேகமாக வளர்ந்தன. கிழக்கே சென்னை, விசாகப்ட்டினம், பாரதீப் போன்றவை பெரும் வளர்ச்சி காணவில்லை காரணம் எண்ணெய் கப்பல் வரவில்லை.

மோடி கிழக்கே ரஷ்யாவில் இருந்து சீனா வழியாக கப்பல் வரும்படி செய்து வங்க கடல் பாதையில் அதிக எண்ணெய் கப்பல் சுற்ற வழிவகுத்தார். இதனால் இனி நாட்டின் கிழக்கு கடற்கரை வளரும். இந்த திட்டத்தின்படி ரஷ்யாவில் இருந்து எண்ணெய் தென் சீனக்கடல், வங்கக் கடல் வழியாக இந்தியா வரும். இதனால் சீன கடல்பாதையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும். இந்த வர்த்தகம் ரூபாய் ரூபிளில் நடப்பதால் டாலர் பரிவர்த்தனை செலவு இல்லை. இன்னும் பணம் மிச்சமாகும்.

இது 2021 டிசம்பரில் புதின் இந்தியா வந்த பொழுது பூரணமானது. எண்ணெய் வரத்தொடங்கிய நேரத்தில் தான் பெரும் யுத்தம் உக்ரைனில் வெடித்தது. ரஷ்யா மேல் தடைகள் வலுத்தன‌. ஐரோப்பிய நாடுகள் சந்தையினை இழந்த ரஷ்யா, சீன இந்திய சந்தையினை பிடித்தால் போதும் சுமார் 250 கோடி மக்கள் கொண்ட இந்த இருநாட்டிலும் குறைந்த விலைக்கு எண்ணெய் விற்றாலும் ஐரோப்பிய லாப கணக்கை சரியாக எட்டலாம் என முனைந்தது.

இங்கே தான் அமெரிக்க மிரட்டல் வரும் எனும் அச்சம் இருந்தது. ஆனால் காட்சிகள் மாறின‌. ரஷ்ய எண்ணெயினை இந்தியா வாங்க தடை இல்லை என அமெரிக்கா அறிவித்திருக்கின்றது. உலக எண்ணெய் சந்தை டாலரில் தான் நடக்க வேண்டும். அதுவும் தன் கண்காணிப்பில் தான் நடக்க வேண்டும் என்ற கொள்கையுடைய அமெரிக்கா இந்த வர்த்தகத்தை தடுக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் ஆசியாவில் இந்தியாவினை இனி பகைக்கமுடியாது என உணர்ந்த அமெரிக்கா "ரஷ்ய தலைமையினை ஆதரிப்பது வேறு, ரஷ்ய மக்களின் அடிப்படை தேவைக்கு உதவுவது வேறு" என விளக்கம் சொல்லி இந்தியாவுக்கு அனுமதி கொடுத்தது. இனி ரஷ்ய எண்ணெய் குறைந்த விலையில் வரும். இதனால் நாடு அடையும் பயன்கள் ஏராளம். எண்ணெய் விலை இனி நிலையாகும். உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை.

கிழக்கு கடற்கரை இனி வேகமாக வளரும் சென்னை போன்ற இடங்களில் எண்ணெய் சுத்திகரிப்பு பெரும் ஆலைகள் வரும். அரேபியாவில் இருந்து எண்ணெய் குறையும். அந்நாடுகளுக்கு இந்தியா மேல் ஒரு மெல்லிய அச்சம் வரும், அவர்களும் இறங்கி வருவார்கள். ரஷ்யாவுடனும் அமெரிக்காவுடனும் சமமாக பேணப்படும் இந்த உறவு நல்ல விஷயங்களை நாட்டுக்கு கொடுக்கும். முன்பு இந்திரா அமெரிக்காவுக்கு அஞ்சி இந்திய பணத்தை சடுதியாக குறைத்தது போல் அல்லாமல், சோவியத்துக்கு அஞ்சி அதன் பழைய இரும்பை எல்லாம் வாங்கியது போல் அல்லாமல், அரபு நாட்டு மிரட்டலுக்கு அஞ்சி அவர்கள் எண்ணெயினை மட்டும் வாங்கி அடங்கியது போல் அல்லாமல், நாட்டுக்கு எது தேவையோ அதை செய்கின்றது மோடி அரசு.

இந்த மண் அரசியல் பெரும்ஞானி கண்ணபிரான் வாழ்ந்த மண், மோடியின் நடவடிக்கைகளெல்லாம் அந்த மாயகண்ணனின் சாயலில் நடப்பவை. ஆனால் சில இடங்களில் பலராமன் பாதையினையும் அவர் எடுப்பார். ஆம் அந்த பலராமன் மகாபாரத பெரும் போரில் கலந்து கொள்ளவில்லை. கண்ணன் தன் படை ஒரு பக்கம் தான் ஒரு பக்கம் என நின்ற பொழுதும் பலராமனோ தவறு இருபக்கமும் உண்டு என யுத்தத்தின் பக்கம் செல்லாமல் ஒருபக்கம் சாராமல் நடுநிலையாய் ஒதுங்கிநின்றார்.

அவர் ராஜ்ஜியம் வாழ்ந்தது. மோடி இப்பொழுது பலராமனின் பாதையில் நாட்டை நடத்துகின்றார். உலகம் முறுகலில் நிற்கும் பதற்றமான நேரம் முன்கூட்டியே பல காரியங்களை செய்து நாட்டை மிக சரியாக நடத்தி செல்லும் அந்த பெருமகனை ஒவ்வொரு இந்தியனும் நன்றியோடு வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள். காமராஜரின் காலத்துக்கு பின் பெரும் மத்திய அரசின் திட்டம் சென்னைக்கு வரவில்லை.

மோடி அரசுதான் இப்பொழுது சென்னையினை மறுபடியும் உலக அரங்கின் முன்னணி நகரமாக்கும் காரியத்தை செய்கின்றது. பாஜக மத்திய அரசுதான் இப்பொழுது தமிழக சென்னைக்கு பெரும் திட்டம் கொண்டு வருகின்றது. இங்கே இப்போது ஏற்படும் ஒரே ஒரு புன்னகை என்னவென்றால் முன்பு திட்டம் அறிவிக்கபடும் போது சென்னைக்கு முன்னுரிமை இருந்தது. ஆனால் இப்போது சந்திரபாபு நாயுடு ஆதிக்கம் செலுத்துகின்றார். கூடுதலாக ஒடிசாவில் பாஜக ஆட்சி நடக்கின்றது. இதனால் இந்த ரஷ்ய எண்ணெய் கிழக்கே விசாகபட்டினம் பாரதீப் என வளர்க்குமா இல்லை சென்னைக்கு வருமா என்பது தான் எதிர்பார்ப்பாக உள்ளது.

மோடியின் வாய்ப்பு சென்னை என்பதாகத்தான் இருக்கும் அவர் நாடு என காண்பாரே தவிர வாக்கு எல்லாம் அவருக்கு சிக்கல் இல்லை. ஆனால் சந்திரபாபு நாயுடு அழுத்தம் கொடுத்தால் அதை மீறி தமிழகத்துக்கு அதை பெற்றுதரவேண்டியது சென்னைக்கோ தூத்துகுடிக்கோ கொண்டு வர வேண்டியது தமிழ்க எம்பிக்களின் பொறுப்பு.

முன்பு பாராளுமன்றத்தில் கத்தி கத்தி மோடியிடம் தண்ணீர் வாங்கி குடித்தது போல் அல்லாமல் இந்த வளர்ச்சி திட்டத்துக்கு கச்சா எண்ணெய் அவர்கள் வாங்கி வந்தால் மிக்க நல்லது. எப்படியோ கிழக்கு கடற்கரை வளர வழி, கிழக்கே கச்சா எண்ணெய் ஆலைகள், துருக்கியின் பார்மோஸ் நீரினை மிரட்டல், சூயஸ் கால்வாய் ஓமன் வளைகுடா இம்சைகள் தாண்டி அமைதியான கடற்பாதை, இந்திய ரூபாயில் வியாபாரம் என பல வகைகளில் பெரும்திட்டத்தை முன்னெடுக்கும் மோடி செய்வது பெரும் புரட்சி.

Tags

Next Story
பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி