பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்யவேண்டும் : மம்தா பானர்ஜி..!

பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்யவேண்டும் : மம்தா பானர்ஜி..!
X

திரிணமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான  மம்தா பானர்ஜி.(கோப்பு படம்)

தார்மீக அடிப்படையில் நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதா கட்சி தனது 400 இடங்களை எட்ட முடியாமல் திணறி வருவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி க்கூறியதுடன் தார்மீக அடிப்படையில் பிரதமர் பதவியை நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

பிரதமருக்கு பெரும்பான்மை கிடைக்காதத்தில் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். இந்த முறை தேர்தல் பிரசாரத்தின்போது 400 இடங்களைத் தாண்டும் என்று பிரதமர் மோடு சூளுரைத்துக் கூறினார். ஆனால் அந்த நம்பிக்கையை அவர் இழந்துவிட்டார். எனவே அவர் உடனடியாக பதவி விலக வேண்டும்" என்று மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

"...இவ்வளவு கொடுமைகள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி ஜி மற்றும் அமித்ஷாவின் இந்த ஆணவமிகுதியாலதான் அவர்கள் பெரும்பான்மை பெறமுடியவில்லை.அதனால்தான் இந்தியா அணி வெற்றி பெற்றது. மோடி அவர் கூறிய எண்ணிக்கையை எட்டாதபோதே அவர் தோற்றுப்போனார். அவர்கள் அயோத்தியில் கூட தோற்றுவிட்டார்கள்" என்று திரிணாமுல் தலைவர் மம்தா கூறினார்.

நாளை தேசிய ஜனநாயக கூட்டணிக் கூட்டம்

இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் தெலுங்கு தேசம் மற்றும் ஜனதா தளம் கலந்து கொள்கின்றன.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா