/* */

மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம்

இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

HIGHLIGHTS

மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க தற்காலிக குழு: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு கடிதம்
X

பைல் படம்

இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டுமென மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பத்மஸ்ரீ விருதை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார்.இந்த சூழலில், புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

பாலியல் புகாருக்குள்ளான பிரிஜ் பூஷண் ஆதரவாளர்கள் நிர்வாகிகளாக தேர்வானதற்கு வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்ததுபுதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய மந்திரி அனுராக் சிங் தாகூர், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், புதிதாக தேர்வான நிர்வாகத்தில், முந்தைய நிர்வாகத்தினரின் தலையீடு உள்ளது என்றும், இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Updated On: 24 Dec 2023 3:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு