எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றம்

எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்  பெங்களூருவுக்கு மாற்றம்
X

பைல் படம்

சிம்லாவில் நடக்க இருந்த இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூருவில் கூடுகிறது

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் ஜூரம் களை கட்டி உள்ளது. பா.ஜ.க வினை 3வது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர விடக் கூடாது என்பதில் எதிர்கட்சிகள் அத்தனையும் ஒத்த கருத்தில் உள்ளன. பிரதமர் வேட்பாளருக்கு எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். பா.ஜ.கவிற்கு எதிராக மொத்தம் 400 தொகுதிகளில் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தவும், ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த சூழல்களுக்கு ஏற்ப வியூகங்களை வகுக்கவும் காங்., தலைமையில் எதிர்கட்சி தலைவர்கள் ஏற்கெனவே பாட்னாவில் கூடிப்பேசியுள்ளனர்.

அடுத்த கூட்டம் சிம்லாவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிம்லாவில் தொடர்ந்து மழை பெய்வதால், அந்த கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 13, 14ல் நடைபெறும் இந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் பெங்களூருவில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் கூறுகையில், ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஷிம்லாவில் நடைபெற விருந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம், அதற்கு பதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வரும் ஜூலை 13 மற்றும் 14ல் நடைபெறும். சிம்லாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கூட்டம் மாற்றப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!