6 மாதத்தில் இவ்வளவு வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கமா..? அதிர்ச்சி அறிக்கை..!!

யுவர் மெசேஜ் பார்க்காமல் 6 மாதங்களில் மட்டும் வாட்ஸ்ஆப் நிறுவனம் 1.32 கோடி இந்திய கணக்குகளை தடை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பான்மையானவர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த தளம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியிருந்தாலும் கூட பல துஷ்பிரயோக பயன்பாட்டுக்கான தளமாகவும் மாறியுள்ளதை மறுப்பதற்கில்லை.
புதிய விதிகள் :
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலி மூலம் தவறான தகவல், போலி செய்திகள், மோசடிகள் மற்றும் வெறுப்புச் செய்திகள் பரவுகின்றன. புதிய ஐடி விதிகள் 2021, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்படி அனைத்து முக்கிய சமூக ஊடக தளங்களும் மீறப்படும் நெறிமுறைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் மாதாந்திர அறிக்கையைப் பகிர வேண்டும்.
அதன்படியே குறிப்பிட்ட கணக்குகள் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவதாகவும், வாட்ஸஆப் தளத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இருப்பதால், டிசம்பர் 2021ம் ஆண்டில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை (20,79,000) முடக்கியதாக WhatsApp சமீபத்தில் அறிவித்தது.
வாட்ஸ்ஆப் ஒரு எண்ட்-டு-எண்ட் (E2E) என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஒரு தளமாகும். கோட்பாட்டளவில், WhatsApp உங்கள் செய்திகளைப் படிக்க முடியாது. உண்மையில், அது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ அல்லது உங்கள் செய்திகளை டிகோட் செய்ய எந்த வகையான உள்ளடக்கத்தைக் கண்டறியும் மென்பொருளையும் பயன்படுத்தவோ முடியாது.
அப்படியானால், செய்திகளைப் பார்க்காமல் வாட்ஸ்ஆப் எப்படி கணக்குகளை தடை செய்கிறது? வாட்ஸ்ஆப்பின் கூற்றுப்படி, மூன்று நிலைகளில் கணக்குகளைத் திரையிடும் முறைகேடு கண்டறியும் இயந்திரத்தை கொண்டுள்ளது. கணக்கு உருவாக்கப்படும்போது, செய்திகள் எவ்வாறு அனுப்பப்படுகின்றன, துவக்கப்பட்ட அந்த கணக்கு பல பயனர்களால் புகாரளிக்கப்பட்டால் அல்லது தடுக்கப்பட்டால் அந்த கணக்கு தடை செய்யப்படும்.
6 மாதங்களில் 1.32 கோடிக்கும் அதிகமான இந்திய வாட்ஸ்அப் கணக்குகள் தடை :
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்த 6 மாதங்களில் 1.32 கோடி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் அரசுக்கும் அதன் இந்திய பயனர்களுக்கும் தெரிவித்துள்ளது. முதன்முறையா 2021,மே15 மற்றும் ஜூன் 15, ஆகிய கால கட்டத்தில் 20 லட்சம் கணக்குகள் (20,11,000) தடை செய்ததாக வாட்ஸ்ஆப் ஜூலை 2021-ல் வெளிப்படுத்தியது. உண்மையில், அதன் பிறகு ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 லட்சம் கணக்குகளை வாட்ஸ்ஆப் தடை செய்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021 உருவாக்கப்பட்ட பின்னர் 1.5 கோடி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. வாட்ஸ்அப்பில் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் +91 எண் மூலம் இந்தியக் கணக்கு தனி அடையாளம் காணப்படுகிறது.
2021 மே15 - ஜூன் 15 : 20,11,000 கணக்குகள்
2021 ஜூன் 16 - ஜூலை 31 : 30,27,000 கணக்குகள்
2021 1 ஆகஸ்ட் - ஆகஸ்ட் 31 : 20,70,000 கணக்குகள்
2021 1 செப்டம்பர் -செப்டம்பர் 30 : 22,09,000 கணக்குகள்
2021 1 அக்டோபர் - அக்டோபர் 31 : 20,69,000 கணக்குகள்
2021 1 நவம்பர் - நவம்பர் 30 : 17,59,000 கணக்குகள்
2021 1 டிசம்பர் - டிசம்பர் 31 : 20,79,000 கணக்குகள் என மொத்தம், 2021 மே 15, முதல் டிசம்பர் 31 வரை, 1 கோடியே 52 லட்சத்து 24 ஆயிரம் இந்திய கணக்குகளை வாட்ஸ்ஆப் தடை செய்துள்ளது.
மெசேஜை பார்க்காமல் வாட்ஸ்ஆப் கணக்குகளை எப்படி தடை செய்கிறது?
வாட்ஸ்ஆப் அதன் E2E என்கிரிப்ஷனை பெருமைப்பட்டுக்கொள்கிறது. வாட்ஸ்அப்பில் முறைகேடுகளை கண்டறிய ஒரு குறிப்பிட்ட பேட்டர்னை பின்பற்றுவதாக ஒயிட் பேப்பரில் விளக்குகிறது. தவறான கணக்குகளை அகற்றுவதற்காகவே இந்த முறை கண்டறியப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu