mandla news today-பானிபூரி சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு என்னாச்சு? கண்ணீரில் பெற்றோர்..!

97 Children Hospitalized in Mandla Government Hospital.
X

mandla news todayபானி பூரி (மாதிரி படம்)

mandla news today-பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

mandla news today-மத்திய பிரதேச கண்காட்சியில் பானி பூரி சாப்பிட்ட 97 குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளானார்கள். பானி பூரி விற்பனை செய்த வியாபாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டத்தில் நடந்த கண்காட்சியில் 'பானி பூரி' சாப்பிட்ட 97 குழந்தைகளுக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாண்ட்லா மாவட்டத் தலைமையகத்திலிருந்து, 38 கிமீ தொலைவில் உள்ள பழங்குடியினர் அதிகம் வாழும் சிங்கர்பூர் பகுதியில் ஒரு கண்காட்சி நடந்தது. அந்த கண்காட்சியை பார்ப்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான குழந்தைகள் பெற்றோருடன் சென்றிருந்தனர்.

mandla news today -நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த பானிபூரி கடையில் காரமான சிற்றுண்டியை குழந்தைகள் சாப்பிட்டனர். சிறிது நேரத்திலேயே குழந்தைகளுக்கு (சுமார் இரவு 7.30 மணி) வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே மாண்ட்லா மாவட்ட மருத்துவமனைக்கு குழந்தைகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர்.குழந்தைகளுக்கு ஒவ்வாத உணவால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் கே.ஆர் ​.ஷக்யா தெரிவித்தார்.

மொத்தம் 97 குழந்தைகள் ஃபுட் பாய்சன் காரணமாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர்," என்றும் அவர் கூறினார். 'பானி பூரி' விற்பனை தடுத்து நிறுத்தப்பட்டது. சிற்றுண்டியின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அறிந்த மத்திய அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே மற்றும் மண்ட்லா நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

பானி பூரியின் பரிசோதனை முடிவுகள் வந்தபின்னரே முழுமையான காரணம் தெரியவரும் என்று டாக்டர் கே.ஆர் ​.ஷக்யா தெரிவித்தார். குழந்தைகளின் பெற்றோர் கண்ணீருடன் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர். குழந்தைகளுக்கு கண்ட இடங்களில் கண்டதை வாங்கிக்கொடுக்க கூடாது என்பதற்கு இன்னொரு உதாரணம்,இந்த சம்பவம். mandla news today, mandla news

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!