மேற்கு வங்காளத்தில் மம்தா முதல்வராக பதவி ஏற்றார்
மேற்கு வங்காள சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற்றது. இந்த மாநிலத்தில் தேர்தல் பல கட்டங்களாக நடைபெற்றது.
இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் வெற்றிப் பெற்றது. இதில் முதல்வர் வேட்பாளரான மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் வெற்றிப் வாய்பை இழந்தார். பாரதிய ஜனதா கட்சி 77 இடங்களை பிடித்தது.
கடந்த திங்கட் கிழமை திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மம்தாவை முதல்வராக தேர்வு செய்தனர். இதனையடுத்து மம்தா கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக் உரிமை கோரி கடிதம் கொடுத்தார். . ஏற்கனவே வகித்து வந்த முதல்வர் பதவியை ராஜினாமா செய்து அவர் கடிதம் கொடுத்திருந்தார்.
அதை ஏற்றுக்கொண்ட கவர்னர் ஜெகதிப்தன்கர் தற்காலிகமாக முதல்வர் பதவியை ஏற்கும்படி மம்தாவை கேட்டுக்கொண்டார். மேலும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார்.
மம்தா பானர்ஜி இன்று காலை 10.45 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில் முதல்-வராக பதவி ஏற்றுக்கொண்டார். மம்தா பானர்ஜி 3-வது முறையாக இன்று மேற்கு வங்க முதல்-வராக ஆகி இருக்கிறார். அடுத்தகட்டமாக அவர் அமைச்சரவையை அமைக்க உள்ளார்.
இந்த நிலையில் மேற்கு வங்காள எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பீமன் பானர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
மம்தா பானர்ஜி தற்போது எம்.எல்.ஏ.வாக இல்லை. அடுத்த 6 மாதத்துக்குள் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட வேண்டும். எனவே திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu