இப்ப புரியுதா..மோடி ஏன் 'மேக் இன் இந்தியா' திட்டம் கொண்டு வந்தார்னு..?

இப்ப புரியுதா..மோடி ஏன் மேக் இன் இந்தியா திட்டம் கொண்டு வந்தார்னு..?
X
ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்திருக்கும்போதுதான் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் அவசியம் முழுமையாக தெரிய வந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் ஆஸ்திரேலியா, கனடா, நார்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதன்மூலம் உணவுப்பொருட்கள் உட்பட பல பொருட்கள் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வது தடையாகும்.

27 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், அத்துடன் அல்பேனியா, கனடா, நார்வே, சுவிட்சர்லாந்து, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான் எல்லையில் பறக்கவும் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் ஆப்பிள், Apple, Nike, Harley-Davidson, Adidas, Google, Meta,Ford, Boeing போன்ற பெரு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களுக்கு ரஷ்யாவில் தடைவிதித்துள்ளன.

இப்போது தெரிகிறதா? சீனா ஏன் எப்போதும் பிற நாடுகளை சார்ந்து இருக்காமல் இருக்கிறது என்று. சீனா தங்களின் சொந்த உற்பத்திகளையே பெரிதும் நம்பியிருக்கிறது. அதே போல பிறநாட்டு உற்பத்திகளையும், பிற நிறுவனங்களையும் அவர்கள் நாட்டுக்குள் அனுமதிப்பதில்லை. இப்படி ஒவ்வொரு நாடும் தற்சார்பு பெறவேண்டும் என்ற பாடத்தை இன்று சீனா உலகுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.அதனால்தான் சீனா சொந்த App-களை உருவாக்கி வருகிறது. அதே போல் மற்ற நிறுவனங்களை அவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை.

மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் :

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியும் 'மேக் இன் இந்தியா' என்ற தேசத்தின் முதுகெலும்பாக அமையும் ஒரு திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். அந்த திட்டம் எம்மை பொருளாதார ரீதியிலும் சுய சார்பு நிலையிலும் தன்னிறைவு பெற உதவும். அதன்மூலம் நாமும் எல்லா நிலைகளிலும் தற்சார்பு பெறலாம். இப்ப பலருக்கும் மேக் இன் இந்தியா திட்டம் எவ்வளவு அவசியமான ஒன்று என்பது புரிந்திருக்கும். இதெல்லாம் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் விளைந்தவைகள்.

இன்று ரஷ்யாவிற்கு ஏற்பட்டிருக்கும் நிலை இந்தியாவிற்கு எப்போதும் ஏற்படக்கூடாது அல்லவா? எல்லா அறிவும் எம்மிடம் உள்ளன. அதை ஒருங்கிணைத்து செயல்படுத்துவதே 'மேக் இன் இந்தியா' திட்டம். அது தேசப்பாதுகாப்புக்கும் பயனுறும்.Power to Empower.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!