காந்தி என்னும் சகாப்தம்..! காலம் போற்றும் மகாத்மா..!

காந்தி என்னும் சகாப்தம்..! காலம் போற்றும் மகாத்மா..!
X

mahatma gandhi speech in tamil-மகாத்மா காந்தி (கோப்பு படம்)

Mahatma Gandhi Speech in Tamil-இந்திய நாட்டின் விடுதலையில் காந்தி இல்லாத ஒரு வரலாறு கிடையாது. அவர் நாட்டின் விடுதலைக்காக அகிம்சை வழியை கையாண்டவர்.

Mahatma Gandhi Speech in Tamil-மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் மற்றும் என் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் காலை வணக்கம். இந்தியாவின் தேசிய விழாவான காந்தி ஜெயந்தியை கொண்டாட இன்று நாம் எல்லாம் இங்கு கூடியுள்ளோம். காந்தி ஜெயந்தியைப் பற்றி பேசுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. காந்தி என்னும் சகாப்தம் என்ற தலைப்பில் உங்கள் முன்னிலையில் பேசப்போகிறேன்.

தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் காந்தி ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தேசிய விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது.

மேலும், காந்தியின் பெருமையை உலகமே அறியும் வண்ணம், அக்டோபர் 2 ம் தேதியை, ‘சர்வதேச அகிம்சை தினமாக’ ஐக்கிய நாடுகள் பொது சபை அறிவித்து, மென்மேலும் காந்திக்கும், காந்திய கொள்கைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளது.

மகாத்மா காந்தி ஒரு சிறந்த தேசபக்தர். அவரது முழுப் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ‘மகாத்மா’ என்ற பட்டம் காந்திக்கு, ரவீந்திரநாத் தாகூர் அவர்களால் வழங்கப்பட்டது. ஏனெனில் இந்த நாட்டுக்காக அவர் தன்னையே அர்ப்பணித்தவர்.



மக்கள் அவரை அன்புடன் பாபு என்று அழைத்தனர். மகாத்மா காந்தி 1869 அக்டோபர் 2 ஆம் தேதி குஜராத் மாநிலம், போர்பந்தர் நகரில் பிறந்தார். மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் காந்தி. அவரது தாயின் பெயர் புத்லி பாய். அவர் இளம் வயதிலேயே அதாவது அவரது 14 வயதிலேயே மே 1883ம் ஆண்டில் கஸ்தூரிபாயை மணந்துக்கொண்டார். அது ஒரு பால்ய விவாகம் ஆகும்.


காந்திஜி லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர். அவர் இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து போராடினார். அதனால், அவர் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார்

நாட்டில் பிரிட்டிஷ் கொடியை வீழ்த்த பல இயக்கங்களை அவர் வழிநடத்தினார். அவை ஒத்துழையாமை இயக்கம், தண்டி யாத்திரை, உப்பு சத்தியாக்கிரகம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகியனவாகும்.


அவர் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக “சத்தியாகிரக” இயக்கத்தை தொடங்கினார். அவரது தலைமையின் கீழ், இந்தியா ஆகஸ்ட் 15, 1947 அன்று சுதந்திரம் பெற்றது.அவர் தனது முழு வாழ்க்கையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார். சத்தியமும் அகிம்சையும் அவரது வாழ்க்கையின் கொள்கைகள்.


மகாத்மா காந்தி நாதுராம் கோட்சேவால் 1948ம் ஆண்டு ஜனவரி 30 அன்று படுகொலை செய்யப்பட்டார். இந்திய அரசு ஜனவரி 30 ஆம் தேதியை தியாகிகள் தினமாக அறிவித்தது. இந்திய ரூபாய் நோட்டுகளில் புன்னகைத்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின்பற்றி அதன் படி வாழ வேண்டும் என்ற உறுதியை நாம் இந்நாளில் ஏற்க வேண்டும். காந்தியின் அறவழி சென்று, நாமும் வளமான இந்தியாவை மேலும் செழிக்கச் செய்வோம். காந்தி ஒரு சராசரி தலைவர் அல்ல. அவர் ஒரு சகாப்தம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது பெயர் இந்திய வரலாற்றில் நிலையாக இருக்கும்.



இந்த சிறப்பான சந்தர்ப்பத்தில், அனைத்து இந்தியர்கள் சார்பாக நான் தேசத்தந்தை காந்திக்கு மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது காந்தி ஜெயந்தி வாழ்த்துகளை கூறுவதில் மகிழ்கிறேன். ஜெய் ஹிந்த்..! ஜெய் பாரத்..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story