மான் கி பாத் மூலம் ரூ.27 கோடி வருமானம்: ஆர்டிஐ தகவல்

மான் கி பாத் மூலம் ரூ.27 கோடி வருமானம்: ஆர்டிஐ தகவல்
X
பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டிற்கு 27 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

பிரதமராக பதவியேற்றது முதல் மாதந்தோறும் ஒருமுறை மோடி மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேசுகிறார். கடந்த மாதம் பிரதமர் மோடியின் 100வது மான் கி பாத் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் வானொலிகளில் ஒலிபரப்பானது. ஐ.நா., சபையில் கூட நேரடியாக விஷூவல் முறையில் ஒளிபரப்பானது. உலகின் பல தலைவர்கள் பிரதமர் மோடியை பாராட்டினர்.

இது தான் காங்., கட்சிக்கு பொறுக்கவில்லை. உடனே ஆல் இண்டியா ரேடியோவில் நடக்கும் பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சிக்கான செலவு என்ன என்று காங்கிரஸ் RTI போட்டு விசாரித்துள்ளது. அதற்கான மத்திய அரசு அளித்த பதில் தான் காங்., கட்சிக்கு தலைச்சுற்றலை ஏற்படுத்தியது. மத்திய அரசு அளித்த பதிலில்.. மொத்தமாக... அதாவது 2014 முதல் 2022 வரை மான் கி பாத் நிகழ்ச்சிக்கு 8.3 கோடி ரூபாய் செலவாகியுள்ளது. அதே சமயம் இந்த நிகழ்ச்சியின் மூலமாக இதுவரை மத்திய அரசுக்கு 35.28 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது என்று பதில் வந்தது. அதாவது மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் மத்திய அரசுக்கு நிகர லாபம் 27 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்த பதிலை கேட்டதும் காங்., கட்சி தகவலை மூடி மறைக்க பார்த்தது. ஆனால் அதற்குள் வட இந்திய ஆங்கில மற்றும் பிறமொழி பத்திரிக்கைகள் இந்த தகவல் பற்றி மிகப்பெரிய அளவில் செய்தி வெளியிட்டுள்ளன. கர்நாடகா பிரச்சாரத்திற்கு மான் கி பாத் நிகழ்ச்சி செலவை காட்டி பிரச்சாரம் செய்ய நினைத்த காங்., சத்தமில்லாமல் இந்த பாதையை மூடி விட்டது.

Tags

Next Story
ஈரோட்டில் இருந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணைய கிடங்குக்கு மாற்றம்..!