கொரோனா காலத்தில் கொட்டிக் கொடுத்த எல்.ஐ.சி.

கொரோனா காலத்தில் கொட்டிக் கொடுத்த எல்.ஐ.சி.
X
கொரோனா காலத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் அதிகளவில் இறப்புரிமம் வழங்கிய தகவல் வெளியாகி உள்ளது

லைப் இன்சூரன்ஸ் ஆப் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் இறப்புரிமம் வழங்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. இது 140 கோடி இந்தியர்களுக்கும் தெரிந்த விஷயம். தெரியாத விஷயம் ஒன்று. கொரோனா காலத்திலும் உலக அளவில் அதிக இறப்புரிமம் வழங்கிய நிறுவனமும் எல்.ஐ.சி., தான். கொரோனா காலத்தில் எல்.ஐ.சி., கொட்டிக் கொடுத்துள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் எல்.ஐ.சி.,யை பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

2018-19 -Rs 17,128.84 கோடி

2019-20 -Rs 17,693 கோடி

2020-21-Rs 23926.89 கோடி

2021-22 -Rs 35,720 கோடி கொரோனா காலகட்டம்

2022-23: Rs 23,423 கோடி. இந்த விவரங்கள் ஐ ஆர் டி ஏ புள்ளி விபரப்படி வெளியாகி உள்ளது.

2020- 2021ம் ஆண்டு அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்த்து 1.5 லட்சம் பேருக்கு இறப்புரிமம் வழங்கி உள்ளது. இதே காலகட்டத்தில் எல்.ஐ.சி., 9 லட்சத்து 33 ஆயிரத்து 889 பேருக்கு இறப்புரிமம் வழங்கி உள்ளது.

2021-2022ல் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்த்து 2.37 லட்சம் இறப்புரிமம் வழங்கி உள்ளது. அதற்கு மாறாக எல்ஐசி நிறுவனம் 13.49 லட்சம் இறப்பு உரிமம் வழங்கி உள்ளது.

2022-2023ல் அனைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்த்து 1.8 லட்சம் இறப்புரிமம் வழங்கி உள்ளது. எல்ஐசி நிறுவனம் 10.71 லட்சம் இறப்பு உரிமம் வழங்கி உள்ளது. இந்தியாவில் உள்ள 23 தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களும் சேர்த்து செலுத்திய இறப்புரிமம் எண்ணிக்கையை விட எல்ஐசி நிறுவனம் 6 மடங்கு இறப்புரிமம் வழங்கி உள்ளது. சராசரியாக ஒரு தனியார் நிறுவனம் 20 ஆயிரம் ரூபாய் இறப்புரிமம் மட்டுமே (SBI நீங்கலாக) வழங்கியுள்ளது. மாறாக எல்ஐசி 10 லட்சம் ரூபாய் இறப்புரிமம் வழங்கி உள்ளது.

இருந்த போதிலும் தனியார் நிறுவனங்கள் தமது டேர்ம் இன்சூரன்ஸ் பிரீமிய தொகையை அதிகப்படுத்தியுள்ளது. ஆனால் எல்ஐசி நிறுவனம் எண்ணிக்கையிலும் தொகையிலும் அதிகப்படியான இறப்புரிமம் வழங்கிய போதிலும் எந்தவிதமான ப்ரீமியம் உயர்வும் செய்யவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!