36 செயற்கை கோள்களை செலுத்த இந்தியாவிடம் கையேந்தும் பிரிட்டன்

பைல் படம்
பிரிட்டனின் 36 செயற்கை கோள்களை இந்தியா விண்ணில் பாய்ச்சியுள்ளது.அதாவது பிரிட்டனிடம் செயற்கை கோளை விண்ணுக்கு செலுத்தும் விஞ்ஞான பொறிமுறை இல்லை. இந்தியாவிடம் அது மிக பலமாக இருக்கின்றது என்பது தான் விஷயம்.
ஆம், பிரிட்டன் இல்லாவிட்டால் இந்தியர் படித்திருக்க முடியாது விஞ்ஞானம் வந்திருக்காது என்பதெல்லாம் சுத்தபொய். ஆத்மரீதியாக தனக்கென பாரம்பரியமும் ஞானமும் கொண்ட நாடுகள் இயல்பிலேயே தனித்த அறிவும் பாரம்பரியமும் கொண்ட மண் எப்போதும் தானே சிலிர்த்து எழுந்து விடும். சீனா ஜப்பானின் வளர்ச்சி அதற்கான உதாரணங்கள். அங்கெல்லாம் பிரிட்டிஷார் செல்லவில்லை. அவர்களை ஆண்டு எல்லாம் சொல்லிக் கொடுக்கவில்லை.
இதோ இந்தியா இப்பொழுது பிரிட்டனின் செயற்கைகோளை அனுப்புகின்றது. அதாவது ஒரு காலத்தில் எந்த இந்தியருக்கு அறிவில்லை. கல்வி இல்லை மிக மிக மோசமான இழிவானர்கள் என சொன்ன பிரிட்டன் இன்று அந்த இந்தியாவிடமே வந்து நிற்கின்றது. சுதந்திரம் அடைந்து எப்படி முன்னேறினோம் அதுவும் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம், வான்வெளி துறையில் தனியார் பங்களிப்பு என மோடி அறிவித்த பின் எவ்வளவு வளர்ந்திருக்கின்றோம் என்றால் இப்படித்தான். இப்படி இந்தியா வளர்ந்து விடக்கூடாது என்று அச்சபட்டுத்தான் பிரிட்டிஷார் நம் நாட்டினை பல துண்டுகளாக உடைத்து விட்டு பிரிவினையை விதைத்து விட்டு சென்றனர்.
இன்று அதனையும் மீறி வளர்ந்து நிற்கிறோம். தேசம் இப்பொழுது உலக அரங்கில் மிக மிக பெரிய இடத்தை எட்டி, நம்பகமான விஞ்ஞான தொழில்நுட்பம் கொண்ட நாடு என உயர்ந்து நிற்கின்றது. அதன் கொடி மிக மிக உயர பறக்கின்றது. தேசாபிமானிகள் பெருமை கொள்ளும் நேரமிது. இப்படி பிரிட்டன் இந்தியாவிடம் பணியும் நேரம். அங்கு சென்று இத்திருநாட்டை மட்டமாக பேசிய தலைவரின் பக்குவம் என்ன என்பதை தேசம் உணர்ந்து அவருக்காக பரிதாபப் படுகின்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu