/* */

ராகுல்காந்திக்கு அடுத்தடுத்து சிக்கல்?

லலித் மோடி தன்னை ராகுல் தவறாக பேசினார் என்று தனது பிரிட்டிஷ் குடியுரிமை மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறார்.

HIGHLIGHTS

ராகுல்காந்திக்கு அடுத்தடுத்து சிக்கல்?
X

பொதுவான விமர்சனங்களில் இவ்வளவு மோசமாக ஒரு உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட்டது இல்லை. அதனால் எளிதாக அப்பீல் செய்து உடைத்து விடலாம் என்று நினைத்த காங்கிரஸுக்கு மாறாக தண்டிக்கப்பட்ட வழக்கில் எழுதப்பட்ட தீர்ப்பு மிகவும் ஆழமாகவும், அழுத்தம் திருத்தமாக எழுதப்பட்டுள்ளதால், அப்பீலுக்கும் ஜாமீனுக்கும் கூட அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வடிவேலு காமெடியில் வருவது போல எல்லா மீனும் இருக்கு, ஜாமீன் மட்டும் இல்லை என்ற ரீதியில் காங்கிரஸ் வக்கீல்கள் அலைகிறார்கள். அதுவும் முக்கியமான பெரிய வக்கீல்கள் அனைவரும் ராகுல் குடும்பத்திற்கு எதிராக இறங்கி விட்டார்களோ என்ற நிலை, பிரச்சினையை மேலும் சிக்கல் ஆக்கி இருக்கிறது.

அது இல்லாமல் இப்போது புதியதாக ஒரு தொல்லை லலித் மோடியிடம் இருந்து வந்துள்ளது. பொதுவாக, பெரிய அந்தஸ்த்தில் உள்ளவர்கள் தங்கள் நாட்டில் பிரச்சினை என்றால், பாதுகாப்பாக வாழ்வதற்கு இன்னொரு வலிமையான நாட்டில்.குடியுரிமை வாங்கி வைத்துக் கொள்வார்கள். ஏதேனும் சிக்கல் வந்தால் அங்கே சென்று விடுவார்கள்.

லலித் மோடி அப்படித்தான் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்று அங்கே உள்ளார். ராகுலுக்கும் பிரிட்டிஷ் குடியுரிமை உள்ளது என்று கூறி வரும் சுப்பிரமணியசாமி, அவரது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று நீண்ட நாளாக கோரி வருகிறார்.

அது மட்டுமல்ல, காங்கிரஸ்காரர்களின் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள சொத்துக்களை பற்றி வெளியிடப்போவதாகவும் லலித் மோடி கூறி இருக்கிறார். லலித் மோடி தன்னை ராகுல் தவறாக பேசினார் என்று தனது பிரிட்டிஷ் குடியுரிமை மூலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர போகிறார்.

பிரிட்டிஷ் குடியுரிமை இல்லாத நம் மீது வழக்கு தொடர்ந்தால் அது எளிதான காரியமல்ல. ஆனால் ராகுலுக்கு பிரிட்டிஷ் குடியுரிமை இருப்பதால், அவருக்கு பெரிய சிக்கலை கொடுத்து விடும். பிரிட்டிஷ் குடியுரிமை இருப்பதால், அந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும், அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதாவது பதில் சொன்னால் சுப்பிரமணியன் சாமி சொன்ன ரெட்டை.குடியுரிமை பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும், சொல்லாவிட்டாலும் நீதிமன்றம் மூலம் அந்த குடியுரிமை பிரச்சினை வெளிவரும்.

அடுத்து நேஷனல் ஹெரால்ட் கேசில் கடந்த வருடம் நடைபெற்ற யங் இந்தியா அலுவலக சோதனையில் திரட்டப்பட்ட சிக்கல்கள் மூலம் சோனியா, ராகுல் ரெண்டு பேருக்கும் சுருக்கு இறுகுகிறது. ஏற்கனவே அவர்கள் இருவரும் தண்டிக்கபட்டவர்களே. அந்த நெருக்குதல்களை வேகப்படுத்தினால் இருவருக்கும் பெரும் சிக்கல் வரும்.

ஆனால் மத்திய அரசு, ராகுல் அரசியலில் இருக்கும் வரை பாஜகவிற்கு லாபம் என்பதால் அடுத்த தேர்தல் வரை விட்டு வைப்பார்கள் என்றே அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். ராகுல் வெளியேறி விட்டால் வேறொரு தலைவர் காங்கிரஸுக்கு வந்து விடுவார். அப்போது எதிர்கட்சிகள் ஒன்று கூட வாய்ப்புண்டு. ஆனால் இந்த ராகுல் காந்தி இருக்கும் வரை எதிர்க்கட்சிகள் ஒன்று சேராது.

ஆனால் இது போன்ற சூழல்களில், ராகுலுக்கு கிடைக்கும் வெளி நாட்டு ஆதரவுகள், அரசியல் சிக்கல்களை மட்டுமல்ல, சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தி விடும். ஏனெனில் இன்று இந்தியாவை பகைத்துக்கொள்ளும் நிலையில் அமெரிக்கா உட்பட எந்த நாடும் தயாராக இல்லை.

தவிர ராகுல்காந்தியிடம் அதற்கான நியாயம் எதுவும் இல்லை. எனவே வரும் காலங்களில் ராகுல் காந்தி மீதான மத்திய அரசியன் பிடி இறுகும். ஆனால் 2024 தேர்தல் முடியும் வரை மத்திய அரசு இந்த வழக்குகளை தீவிரபடுத்தாது என்றே அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Updated On: 2 April 2023 9:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு