லால் பகதுார் சாஸ்திரியின் அம்மா, இப்படியெல்லாம் வாழ்ந்திருக்காங்க..!
லால் பகதூர் சாஸ்திரியின் தயார்.
சுதந்திரம் பெற்ற பின்னர் இந்தியாவிற்கு கிடைத்த தலைவர்கள் எவ்வளவு எளிமையான வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதை படித்தாலோ, கேட்டாலோ ஆச்சர்யமாக உள்ளது. இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தை தற்போது பார்க்கலாம். ரயில்வே பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார்.
அப்போது பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தார். அவர் அருகில் சென்ற போர்ட்டர் அந்த வயது முதிர்ந்த பெண்மணியிடம், கேட்டார்: "நீங்கள் எந்த ஊருக்கு செல்ல வேண்டும்?" "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன்"என்றார் அந்த வயது முதிர்ந்த பெண்மணி. இதனை கேட்ட போர்ட்டர் "அம்மா - இனிமேல் எந்த வண்டியும் கிடையாது. கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.." என்றார்.
அந்த பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. கவலையுடன் போர்ட்டரை பார்த்தார். அந்த போர்ட்டர் கொஞ்சம் கரிசனத்தோடு, அந்த வயது முதிர்ந்த பெண்மணியை பயணிகளின் அறைக்கு அழைத்துச் சென்றார். அந்த அறையில் இரவு பொழுதை முழுமையாக கழிக்கலாம் என்றார்.
அதன் பின்னர் ஏதோ ஒரு ஆர்வத்தில் அந்த போர்ட்டர் "உங்கள் மகன் டில்லியில் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" என கேட்டார். பதிலளித்த வயது முதிர்ந்த பெண்மணி எனது மகன் டெல்லியில் இரயில்வே துறையில் வேலை செய்கிறான் என்றார்.
அந்த போர்ட்டர் "அவரது பெயரை சொல்லுங்கள்; தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்..." என்றார். அந்த வயது முதிர்ந்த பெண்மணி, எனது மகன் பெயர் லால். எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில்வே துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள் என்றார்.
அந்த பெண்மணியின் பதிலை கேட்டதும் மொத்த ஸ்டேஷனும் புரண்டது. எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். அதை பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை. டெல்லிக்கு சென்ற அந்த வயது முதிர்ந்த பெண்மணி, தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி, நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்? என்பது தான்.... அதற்கு அமைச்சர் சொன்னது ‘‘அது ஒரு சிறிய எளிமையான வேலை’’ என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu