தேர்தல் பெட்டிங்கில் இப்படி ஒரு நேர்மை..!
போட்டியில் காரை கொடுத்த பைஜூ
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாவக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பைஜு. தீவிர காங்கிரஸ் பிரமுகரான இவர் தனது நண்பரும் பாஜக பிரமுகருமான சுனில் என்பவரிடம் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவு குறித்து பந்தயம் கட்டியிருந்தார் .
திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் சுரேஷ் கோபி நிச்சயம் தோல்வி அடைவார் எனவும் அவர் வெற்றி பெற்றால் தனது காரை பரிசாக தருவேன் என்று சொல்லியிருந்தார்.
அதேபோல் பாஜக பிரமுகரான சுனிலும், காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் வெற்றி பெற்றால் தனது காரை பரிசாக தருவதாக அறிவித்திருந்தார். ஆனால் கேரள மாநிலத்தில் யாருமே எதிர்பாராத விதமாக பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி வெற்றி பெற்று விட்டார்.
இதையடுத்து சொன்ன சொல்லை காப்பாற்றுவதற்காக பைஜூ தனது புத்தம் புதிய மாருதி வேகன் ஆர் காரை தனது ஊரில் உள்ள கோயில் முன்பு சுனிலிடம் ஒப்படைத்து காரை அவரது பேருக்கு மாற்றுவதற்கான ஆவணங்களையும் அளித்திருக்கிறார். எனக்கு இது எதிர்பாராத இழப்பு தான் இருந்தாலும் சொன்ன பேச்சைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக காரை கொடுத்திருக்கிறேன் என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்கிறார் பைஜூ.
'என்னடா இது தேர்தல் பெட்டிங்கில் ஒரு மனுஷன் இவ்ளோ நேர்மையாக இருக்கிறாரா?' என்று எல்லோரும் ஆச்சர்யப்படுகிறார்கள். தேர்தலில் வெற்றி தோல்வி சகஜம் தானே? என்று தான் விட்ட சவாலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், சொன்ன வாக்கைக் காப்பாற்ற மனுஷன் காரையே கொடுத்திட்டாரே...? சாரே.. நிங்கள்.. വാക്ക് തെറ്റാത്തവനാണ്.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu