கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து நாளை விலகக்கூடும்
கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா
கர்நாடகாவின் முதல்வர் எடியூரப்பா பதவியில் இருந்து நாளை விலகக்கூடும்-புதிய முதல்வர் நியமனம் குறித்து இன்று தெரிந்து விடும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்
கர்நாடகாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்திருக்கும் எடியூரப்பா, அம்மாநிலத்தில் அதிக முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கர்நாடகாவில் புதிய முதல்வர் நியமனம் குறித்து இன்று தெரிந்து விடும் என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார் அம்மாநில முதல்வர் எடியூரப்பா.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பின்னர், எடியூரப்பா (வயது 78) தலைமையிலான புதிய பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது. நாளையுடன் (ஜூலை 26) அவர் முதல்வராக பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இரண்டு ஆண்டுகாலமாக சுமூகமாக ஆட்சி செய்து வந்த எடியூரப்பாவிற்கு சமீபத்தில் சக எம்.எல்.ஏக்களால் குடைச்சல் கடுமையாக எழுந்தது. எடியூரப்பாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கலகக் குரல்கள் எழுந்தன.
சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகேஷ்வர், பாஜக எம்எல்ஏக்கள் பசனகவுடா எத்னால், அரவிந்த் பெல்லத் உள்ளிட்டோர் எடியூரப்பாவை பகிரங்கமாக ஊடகங்களிலும், பொது மேடைகளிலும் விமர்சித்து வருகின்றனர். 78 வயது ஆகிவிட்டதால் அவருக்கு பதிலாக வேறு ஒருவரை முதல்வராக அமர்த்த வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்று மேலிடத்துக்கு அனுப்பினர். இதனால் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் கடந்த மாதம் பெங்களூருவில் அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்தினார்
இதனிடையே இந்த மாத தொடக்கத்தில் திடீரென டெல்லிக்கு சென்று திரும்பிய எடியூரப்பா அங்கு பிரதமர் மோடி உட்பட மூத்த பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார். எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து விலகுவார் என கூறப்பட்டு வருகிறது. கடந்த வியாழன் அன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய எடியூரப்பா, வரும் ஜூலை 26 ம் தேதியுடன் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது, அதன் பிறகு ஜே.பி.நட்டா என்ன செய்ய சொன்னாலும் நான் தயார் தான் என பேசியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடையே பேசிய எடியூரப்பாவிடம், அடுத்த கர்நாடக முதல்வர் ஒரு தலித்தாக இருக்கலாமா என கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், "இன்று பாஜக தலைமையிடமிருந்து முக்கியத் தகவல் வந்துவிடும், அதன் பிறகு தான் நான் பதவியில் இருப்பேனே இல்லையா என்பதை உங்களிடம் தெரிவிப்பேன். எப்போது தகவல் கிடைத்தாலும், கட்சியின் தலைமை என்ன செய்ய சொன்னாலும் நான் தயார் தான் என எடியூரப்பா கூறியுள்ளார்.
முதல்வராக இரண்டு ஆண்டுகளை நாளையுடன் அவர் நிறைவு செய்த பின்னர், எடியூரப்பா பதவி விலகல் இருக்கும் என்றே தகவல் பரவி வருகிறது. கர்நாடகாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்திருக்கும் எடியூரப்பா, அம்மாநிலத்தில் அதிக முறை முதல்வர் பதவி வகித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu