மோடியிடம் மொத்தமாக சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி

மோடியிடம் மொத்தமாக  சரண்டர் ஆன ஜெகன் மோகன் ரெட்டி
X
சந்திரபாபுநாயுடுவின் நெருக்கடியில் இருந்து தப்பிக்க வேறு வழியின்றி ஜெகன்மோகன்ரெட்டி பிரதமர் மோடியிடம் சரணடைந்தார்.

ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சினை அடிப்படையிலான பாஜகவிற்கு தனது ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 15 எம்.பி.க்கள் இருப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நினைவூட்டி பாஜகவிற்கு தனது ஆதரவை நீட்டி உள்ளார். பாஜக 2024 மக்களவை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாமல் உள்ளது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இன்னும் சில உதிரி கட்சிகள் சேர்ந்து ஆதரவு கொடுத்தால் மட்டுமே பாஜக ஆட்சியை தொடர முடியும். 2024 மக்களவை தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றாலும், பாஜக ஆட்சி நீடிக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை. பாஜக ஆட்சி நீடிக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். மேலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி நீடிக்க முடியாது.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜக ஜெகன் மோகன் ரெட்டியை எதிர்த்து போட்டியிட்டனர். அங்கே மக்களவை தேர்தல் மட்டுமன்றி சட்டசபை தேர்தலிலும் ஜெகன் மோகன் ரெட்டியை பாஜக எதிர்த்தது. சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்றது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது. 144 இடங்களில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்றுள்ளது. பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்ற நிலையில் அனைத்து இடங்களிலும் வென்றது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தனக்கு எதிராக பல வழக்குகள் உள்ள நிலையில், மாநில அரசின் நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க ஜெகன் மோகன் ரெட்டி மோடியிடம் தஞ்சம் அடைய முடிவு செய்துள்ளார்.

அதன்படி, ஆந்திர பிரதேசத்தில் புதிய அரசியல் திருப்பமாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) தலைவர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலம் மற்றும் தேசத்தின் நலன்களை மனதில் வைத்து பிரச்சினை அடிப்படையிலான பாஜகவிற்கு தனது ஆதரவை வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 15 எம்.பி.க்கள் இருப்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்.டி.ஏ.) நினைவூட்டி பாஜகவிற்கு தனது ஆதரவை நீட்டி உள்ளார். ஒய்.எஸ்.ஆர்.சி.பி.க்கு மாநிலங்களவையில் 11 எம்.பி.க்களும், மக்களவையில் நான்கு எம்.பி.க்களும் உள்ளதால் மொத்த பலம் 15 ஆக உள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு (டிடிபி) 16 எம்.பி.க்கள் உள்ளனர். சம பலத்துடன் சக்தி வாய்ந்தவர்களாக நாம் இருக்கிறோம். யாரும் நம்மை தொட முடியாது, நாம் தைரியமாக, மக்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

ஆனாலும், அவர் சந்திரபாபுநாயுடுவின் நெருக்கடிக்கு பயந்தே பிரதமர் மோடியிடம் சரணடைந்துள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!