கார்கில் போரில் உதவிய இஸ்ரேல்! இப்போது என்ன செய்ய போகிறது இந்தியா?

கார்கில் போரில் உதவிய இஸ்ரேல்!   இப்போது என்ன செய்ய போகிறது இந்தியா?
X

கார்கில் போர் இதுவரை இந்திய ராணுவம் பார்க்காத புதிய போர்க்களம். பாகிஸ்தானை போர்களத்தில் எளிதாக வீழ்த்தும் திறன் இந்தியாவிற்கு இருந்தாலும், கார்கில் போர்க்கள சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இல்லை. இதனால் கிட்டத்தட்ட முழுமையான போரை நடத்தி தான் பாக்கிஸ்தானை வீழ்த்த முடியும் என்ற நிலையில் இருந்தது இந்தியா.

முழு போரை நடத்தவும் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தயாராகி விட்டார். அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூட இந்தியாவும், பாகிஸ்தானும் தயாராகி விட்டன. அந்த அளவு அமெரிக்கா, அப்போது தனது நட்பு நாடான பாக்கிஸ்தானை உசுப்பி விட்டிருந்தது. கார்கிலில் பாக் ராணுவம் ஊடுறுவலுக்கு துாண்டில் போட்டதே அமெரிக்காவின் ஆதரவு தான் என்பது வெளிப்படையான உண்மை.

கார்கில் போர்க்களத்தில் மிக, மிக உயரத்தில் எதிரிகள். கீழே நமது ராணுவம். மோசமான நிலையில் நாம் இருந்தது பலருக்குத் தெரியாது. கார்கில் போரின் வெற்றி நமக்கு எளிதாகக் கிட்டி விடவில்லை. பலமுக்கிய மலை முகடுகளை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்து உயர்ந்த நிலையில் இருந்து நம் படைகளை துவம்சம் செய்து கொண்டு இருந்தனர்.

கீழே இருந்து மலைமேலே உள்ள பாக் ராணுவத்தை விரட்ட முயன்று பல நூறு இந்திய வீரர்கள் பலியாகிக் கொண்டு இருந்தனர். நம்முடைய பினாகா 60 கிமீ பாயும் ராக்கெட் குண்டுகள் கூட அவர்களிடம் எடுபடவில்லை.


ஆர்ட்டிலரி ஃபயரிங், பண்ணாலும் மலை முகடுகளில் அவர்கள் அமைத்து இருந்து பதுங்கு குழிகள் அவர்களைப் பாதுகாத்தன. ஒரேவழி பதுங்கு குழிகளை அழிக்க வேண்டும். ரஷிய MI ஹெலிகாப்டர்களை களமிறங்கியது. ஆனால் இந்த ஹெலிகாப்டர்கள் மலை முகட்டை நெருங்கிய உடனே பாக் ராணுவம் குருவிகளைப் போல் இந்த ஹெலிகாப்டர்களை சுட்டுத்தள்ளியது. காரணம் அப்போது பாக்.. வசமிருந்த அமெரிக்க ஸ்டிங்கர் ஏவுகணைகள்.

15000 அடி உயரத்தில் பறக்கும் எந்த ஒரு போர் விமானத்தையோ , ஹெலிகாப்டரையோ எளிதாக வீழ்த்தும் சக்தி மிக்க ஆயுதம் ஸ்டிங்கர் ஏவுகணைகள். தோள் மீது வைத்து சுலபமாக ஏவக்கூடிய கெட்ட ஏவுகணைப் பிசாசு அது. மிக் 27 ரஷிய விமானம் மூலம் R73 ஏவுகணைகளை, ஸ்டிங்கர் ஏவுகணைகள் தொடாத உயரத்தில் இருந்து ஏவியும் பலன் பெரிதாக இல்லை.

வெறுமனே இயந்திரத் துப்பாக்கிகள், கை எறி குண்டுகள் வைத்து உயரத்தில் உள்ள எதிரியை கீழே இருந்து மேலே ஏறி அடிப்பது தற்கொலை முயற்சி தான். இந்திய ராணுவம் இதுவரை சந்திக்காத புதிய போர்க்களம் அது. இந்தியாவிற்கு மிகப்பெரிய சோதனையாக அமைந்தது.

பிரம்மோஸ் ஏவுகணைகளை ஏவலாம் என்றால், அவை 70 டிகிரி கோணத்தில் கீழே இறங்கி பதுங்கு குழிகளை அடிக்க வேண்டும். அந்த காலகட்டத்தில் அப்படி பிரமோஸ் ஏவுகணைகள் மாற்றி அமைக்கப்படவில்லை.

பிரம்மோஸ் ஏவுகணைகளும் கை கொடுக்கவில்லை. அப்போது நம்மிடம் விமானத்தில் இருந்து பிரம்மோஸை ஏவும் வசதி கிடையாது. இன்று அவற்றை SU 30 விமானங்களில் வெற்றிகரமாக பொருத்தி விட்டது இந்திய விமானப்படை.

இந்த சூழலில் தான் வாஜ்பாய் முழுமையான போரை சந்திக்க தயாரானார். அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்திய பிரதமர் வாஜ்பாய்க்கு போன் செய்து, இந்தியா போரை வாபஸ் வாங்காவிட்டால், பாகிஸ்தான் அணுகுண்டை வீச முடிவு செய்துள்ளது என தெரிவித்தார். அப்போது கொந்தளித்த வாஜ்பாய், அப்படி நடந்தால் அடுத்த நொடியே பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இல்லாமல், ஒரே இரவுக்குள் அழித்து விடுவோம். முழுப்போர் நடத்தி பார்க்கலாம் என கிளிண்டனிடம் பதிலடி கொடுத்தார். அதன் பின்னர் தான் அமெரிக்காவும், பாகிஸ்தானும் சற்று அடங்கின. இது தான் நல்ல தலைமைக்கு சிறந்த சான்று.

கார்கிலில் இந்தியாவின் சிக்கலான சூழ்நிலையினை அறிந்த இஸ்ரேல் ஆபத்பாந்தவனாக உதவ முன்வந்தது. ஸ்பைஸ் எனப்படும் பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகளை நமது மிராஜ் 2000 போர் விமானங்களில் பிரான்ஸ் அரசின் அனுமதி பெற்று இஸ்ரேலிய அரசு பொருத்திக் கொடுத்தது.


35000 அடி உயரத்தில் பறந்தால் ஸ்டிங்கர் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்திட முடியாது. மிராஜ் 2000 விமானங்கள் இந்த உயரத்தில் இருந்து ஸ்பைஸ்குண்டுகளை வீசி பாக் பதுங்கு குழிகளை நிர்மூலம் செய்தன. அதன் பின்னர் தான் போர்க்களம் நமக்கு சாதகமாக அமைந்தது. இந்த ஸ்பைஸ் குண்டுகள் நமக்கு புதிய சமாச்சாரம்.

அது வரை சாதாரணமாக ஷெல் குண்டுகளை மட்டும் பயன்படுத்தி வந்தோம். இவை ஆழமான பதுங்கு குழிகளை பெரிதாக ஏதும் பண்ணாது. ஆனால் ஸ்பைஸ் குண்டுகள் பதுங்கு குழிகளை இருபது அடி ஆழத்திற்கு மேல் ஊடுருவி த் தாக்கும். இப்போது கூடுதலாக ரஃபேல் விமானத்தை வாங்கிய போது ஹாமர் ஏவுகணைகளையும் வாங்கி விட்டோம்.

ஸ்பைஸ் குண்டுகளை விட ஹாமர் ஏவுகணைகள் சக்தி மிக்க ஆயுதம் தான். பிறகு மேற்கொண்டு எதிரிகள் மலை மீது ஏறாமல் இருக்க போபர்ஸ் ஆர்ட்டிலரி ஃபயரிங் உதவியது. இப்போது நம்மிடம் அடாக்ஸ் ஆர்ட்டிலரி துப்பாக்கிகள் உள்ளன.

48 கிமீ வரை இதன் ஷெல் குண்டு பாய்ந்து போய் தூரத்தில் வரும் போதே எதிரியை நலம் விசாரிக்கும். ஆத்ம நிர்பார் உபயம். இப்படி இஸ்ரேலிய உதவியுடன் கார்கில் போரினை இந்தியா வென்றது. இதனால் தான் இஸ்ரேல் மீது இந்தியாவிற்கு தனி பாசம் உருவாகிறது.

இப்போது இஸ்ரேல் வலைபின்னல் சிக்கலில் சிக்கியிருக்கும் போது, இந்தியா என்ன முடிவு எடுக்கப்போகிறது என உலகமே பார்த்துக் கொண்டுள்ளது. நிச்சயம் இந்தியா நேரடி போரில் இறங்காது. ஆனால் இஸ்ரேலுக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்யும். பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பு படை பல விதங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய ஆயுதங்கள் வாங்கப்பட்டுள்ளன. சொந்தமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவின் முப்படைகள் மிக,மிக திறன் மிக்கதாக மாறி விட்டன. யாராவது இந்தியாவை தொட்டால், தனியாகவே நின்று ஒருசில நிமிடங்களில் அவர்களை நொறுக்கி போட்டு விடும் திறன் இந்தியாவிற்கு உண்டு. இந்திய ராணுவத்தின் இந்த திறன் பற்றி அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணியமும் வியட்நாமில் கூறியிருந்தார்.

இப்படி விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து நிற்கும் இந்தியா தனது நெருங்கிய நண்பனான இஸ்ரேலுக்கு உதவும், ஆனால் போரில் இறங்காது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!