ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

ஒடுக்கப்பட்ட பிரிவினர்களுக்கு உள்ஒதுக்கீடு - சுப்ரீம் கோர்ட் உத்தரவு!
X
இடஒதுக்கீட்டில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பட்டியலின (எஸ்.சி.) மற்றும் பழங்குடியின (எஸ்.டி.) பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உள்பட 6 நீதிபதிகள் உள்ஒதுக்கீடு செல்லும் எனத் தெரிவித்துள்ளனர். நீதிபதி பெலா எம்.திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இ.வி.சின்னையா மற்றும் ஆந்திர மாநில அரசுக்கு இடையேயான வழக்கில் கடந்த 2004ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பை வாசித்த டி.ஒய். சந்திரசூட், “அரசியல் சட்டத்தின் 14-வது பிரிவு உள்ஒதுக்கீட்டை மீறவில்லை, பட்டியலின உட்பிரிவுகள், பட்டியல் வகுப்பினர் என்ற வரையறையில் இருந்து விலக்கப்படாததால் உள் ஒதுக்கீடு வழங்கலாம்.

பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு பஞ்சாப் அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீடு செல்லும், எஸ்.சி., எஸ்.டி. உள் ஒதுக்கீட்டை மாநில அரசு வழங்க முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், நீதிபதி கவாய், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை உள்ஒதுக்கீட்டில் இருந்து நீக்க மாநில அரசுகள் கொள்கை வடிவமைக்க வேண்டும். அதன்மூலம் தான் உண்மையான சமூக நீதியை பெற முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture