இந்தியாவின் 2வது நீளமான எக்ஸ்பிரஸ் சாலை..! பாலைவனப் பயணம்..!
India's Second Longest Expressway in Tamil,The National Highways Authority of India,longest expressway between Delhi and Mumbai,Amritsar to Jamnagar,500 Km of Desert Terrain
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலையை டிசம்பர் 2025க்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே நாட்டின் மிக நீளமான விரைவுச் சாலை அமைக்கப்படுவது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இரண்டாவது மிக நீளமான விரைவுச்சாலை இரண்டு நகரங்களுக்கு இடையே நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பாலைவனம் குறிக்கிடுகிறது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் தனித்துவமே பாலைவனத்தின் வழியே அந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுவதே ஆகும். அடுத்த ஆண்டு டிசம்பரில் முடிக்கப்படலாம்.
India's Second Longest Expressway in Tamil
செயல்பாட்டுக்கு வந்தவுடன், வணிக ரீதியாக முக்கியமான நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் பாதியாக குறைக்கப்படும். பயணச் செலவுகளும் கணிசமாகக் குறையும். பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் முதல் குஜராத்தின் ஜாம்நகர் வரையிலான இந்த விரைவுச்சாலை, டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயின் 1,350 கி.மீ.க்கு சற்று குறைவான அதாவது 1,316 கி.மீ தூரத்தைக் கொண்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) டிசம்பர் 2025 க்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. குறிப்பிடத்தக்க பகுதியில் பெரும்பாலான பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த இந்த விரைவுச் சாலை ராஜஸ்தான் மற்றும் ஹரியானா முழுவதும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் பாலைவனத்தை கடந்து செல்லும். வணிக செயல்பாடுகளுக்கு கணிசமான பலன்களை உள்ளடக்கியதாக இந்த சாலி அமைவதுடன் அன்றாடப் பயணிகளுக்கும் இது பெரும் பலனைத்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.
India's Second Longest Expressway in Tamil
அமிர்தசரஸைச் சுற்றியுள்ள தொழில் மையங்களை குஜராத்தில் உள்ளவற்றுடன் நேரடியாக இணைப்பதன் மூலம், இணைப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு இந்த சாலை பெரிதும் பயனுள்ளதாக அமைகிறது. விரைவுச் சாலையின் சுமார் 500 கிலோமீட்டர் தூரமுள்ள பாதை ராஜஸ்தான் வழியாக அமைக்கப்படும். இதில் குறிப்பிடத்தக்க பகுதிபாலை நிலப்பரப்பைக் கடக்கிறது.
அமிர்தசரஸில் இருந்து ஜாம்நகர் வரையிலான தற்போதைய தூரம் 1,516 கிமீ ஆகும். இது சுமார் 26 மணிநேர பயணம் ஆகும். புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதன் மூலம், தூரமும் 216 கிலோமீட்டர் குறையும், பயண நேரம் பாதியாகக் குறையும், வெறும் 13 மணி நேரம் மட்டுமே ஆகும். அதிவேக நெடுஞ்சாலையில் 100 கிமீ வேகத்தில் வாகனங்களை இயக்க முடியும் என்பதால் வேகம் அதிகரிப்பதே இதற்கு மிகப்பெரிய காரணமாக இருக்கும்.
India's Second Longest Expressway in Tamil
அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலையால் டெல்லி-என்சிஆர் மக்களும் பயனடைவார்கள். இது பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத் மக்களுக்கு நேரடி இணைப்பை வழங்கும். இந்த விரைவுச்சாலை டெல்லி-கத்ரா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும்.
மேலும், இந்த விரைவுச் சாலை குஜராத்தில் இருந்து காஷ்மீருக்கு எளிதாகச் செல்ல உதவும். இது அமிர்தசரஸ், பதிண்டா, மோகா, ஹனுமன்கர், சூரத்கர், பிகானர், நாகூர், ஜோத்பூர், பார்மர் மற்றும் ஜாம்நகர் ஆகிய நகரங்களுக்கு பயனளிக்கும்.
இந்த நெடுஞ்சாலையின் சிறப்பும் பொது நன்மைகளும்
நீளமான நெடுஞ்சாலை
கட்டுமானப் பணியில் இருக்கும் அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை, நிறைவடைந்தவுடன் இந்தியாவில் கட்டப்பட்ட மிக நீளமான இரண்டாவது நெடுஞ்சாலையாக இருக்கும். இது 1,256.95 கிலோமீட்டர்கள் (781 மைல்கள்) நீண்டு, பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் மற்றும் குஜராத்தின் ஜாம்நகரை இணைக்கிறது.
ரூ.80,000 கோடி திட்டம்
இந்த நெடுஞ்சாலை சுமார் 80,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தபப்டும் ஒரு பெரிய பணியாகும். இது பாரத்மாலா பரியோஜனா முன்முயற்சியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மைத் திட்டமாகும். இந்த நெடுஞ்சாலை அமிர்தசரஸ்- ஜாம்நகர் இடையேயான பொருளாதார பாதை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் வணிக நடவடிக்கைகளுக்கு இந்த நெடுஞ்சாலை பெரிதும் பயனாகும்.
முக்கிய பொருளாதார மண்டலங்களை இணைக்கும் சாலை
அமிர்தசரஸ்-ஜாம்நகர் எக்ஸ்பிரஸ்வே ஒரு நீண்ட சாலையாக மட்டுமே இருக்காது. இது ஒரு மூலோபாய பொருளாதார தாழ்வாரம் ஆகும். இது அமிர்தசரஸ், பதிண்டா மற்றும் ஜாம்நகர் போன்ற முக்கிய நகரங்கள் உட்பட முக்கிய தொழில்துறை மையங்கள் மற்றும் விவசாய மையங்களை இணைக்கிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இணைப்பு இந்த பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் உட்பட நாட்டின் நான்கு மாநிலங்களை இணைக்கிறது.
எண்ணெய் வழிக்கான முதல் தடம்
அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச்சாலை இந்தியாவின் எண்ணெய் தொழில்துறைக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. பதிண்டா, பார்மர் மற்றும் ஜாம்நகர் ஆகிய மூன்று பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை நேரடியாக இணைக்கும் வகையில், நாட்டின் முதல் அதிவேக நெடுஞ்சாலையாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்யேக பாதை இந்தியாவிற்குள் எண்ணெய் போக்குவரத்தின் செயல்திறன் மற்றும் நேரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பயண நேரத்தைக் குறைக்கும்
தற்போது, அமிர்தசரஸ் மற்றும் ஜாம்நகர் இடையே பயணம் செய்ய 26 மணிநேரம் ஆகலாம். இந்த சாலைப்பணிகள் முடிந்ததும், அமிர்தசரஸ்-ஜாம்நகர் விரைவுச் சாலை பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பீடுகளின்படி சுமார் 13 மணிநேரம் வரை குறையும் என்று தெரிகிறது. இது வணிகப் போக்குவரத்திற்கு பயனளிப்பது மட்டுமல்லாமல், இந்தப் பகுதிகளுக்கு இடையேயான தனிப்பட்ட பயணத்தை மிக வேகமாகவும் வசதியாகவும் மாற்றும். தூரம் மற்றும் பயண நேரம் குறைவதால் பெருமளவு எரிபொருள் மற்றும் பணச்செலவும் குறைகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu