என்னது..? இந்திய மக்கள் தொகை 2060-ல் இவ்ளோவா..?!
இந்திய ஜனத்தொகை (கோப்பு படம்)
இந்தியாவின் மக்கள் தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன் பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. வியாழக்கிழமை வெளியிட்ட நிகழாண்டின் ‘உலக மக்கள்தொகை கணிப்புகள்’ அறிக்கையின்படி, உலகின் மக்கள்தொகை அடுத்த 50-60 ஆண்டுகளில் தொடா்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியா நிலை தொடரும். அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவைக் கடந்த ஆண்டு முந்திய இந்தியா, நடப்பு நூற்றாண்டின் இறுதி வரை அந்த இடத்தைத் தக்க வைக்கும். நடப்பு ஆண்டில் 145 கோடியாக இருக்கும் இந்தியாவின் மக்கள்தொகை, 2054-இல் 170 கோடி என்ற உச்சத்தை அடையும்.
அதற்கு பிறகு இந்தியாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கி, நூற்றாண்டின் இறுதியான 2100-இல் 150 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்டுகிறது. எனினும், உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியாவே இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 126 நாடுகள் மற்றும் பகுதிகளில் 2054-ஆம் ஆண்டுவரை மக்கள்தொகை தொடா்ந்து வளரக் கூடும். நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 2100-க்கு பிறகே உச்சத்தை அடையக்கூடும். இந்தியா, இந்தோனேசியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா போன்ற உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடுகள் இந்தக் குழுவில் அடங்கும்.
2080-இல் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையை விஞ்சும் எனவும் அறிக்கை கூறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu