இந்திய ரூபாய்க்கு உலக நாடுகள் மாறுவது ஏன்?

இந்திய ரூபாய்க்கு உலக நாடுகள் மாறுவது ஏன்?
X
Indian Currency News -உத்திரவாதம் எதுவும் இல்லாத அமெரிக்க டாலரின் பிடியில் இருந்து இந்திய ரூபாய்க்கு உலகின் பல நாடுகள் மாறி வருகின்றன.

Indian Currency News -உலக அளவில் டாலருக்கு மாற்றாக இந்திய கரன்சி உருவாகி வருகிறது. ரஷ்யா தான் இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் கொடுத்து இந்திய கரன்சியை வாங்கியது. இப்போது அரபு நாடுகள், கிழக்கு ஆசிய நாடுகள் பலவும் இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்ய தொடங்கி உள்ளன.

அமெரிக்க டாலருக்கும் இந்திய கரன்சிக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

இந்திய அரசு ரூபாய் நோட்டுக்களை அதிகம் அச்சடிக்க வேண்டும் எனில் அதற்கு இணையான தங்கத்தை ரிசர்வ் வங்கி அதன் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். நாளை நம் நோட்டு செல்லவில்லை என்றால் அந்த ரூபாய்க்கு இணையான தங்கத்தை ரிசர்வ் வங்கி கொடுக்க வேண்டும் என்பதே அதன் அர்த்தம். இது போன்ற நடைமுறை தான் 1994 வரை அமெரிக்காவிடமும் இருந்தது.

சோவியத் யூனியன் உடைந்து அமெரிக்கா உலகின் ஒரே வல்லரசானவுடன், அந்த நடைமுறையை மாற்றியது. அது தங்கத்தை எல்லாம் அடகு வைக்காது, அது நினைத்தால் செனட் அப்ரூவல் வாங்கினால் போதும். எவ்வளவு டாலர் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம். நாளை அமெரிக்க டாலார் வீழ்ந்தால், அதனிடம் சென்று தங்கம் எல்லாம் கேட்க முடியாது. இது என்ன அநியாயம் என்றெல்லாம் நாம் கேட்க முடியாது, ஏனெனில் அமெரிக்கா தான் உலகின் பெரியண்ணன்.

ஏனெனில் அந்த டாலரில் அடிக்கப்பட்ட வாசகம் இது தான் IN GOD WE TRUST. ஆம் அமெரிக்காவிடம் கேட்க முடியாது, நாளை டாலர் வாங்க ஆளில்லை என்றால் கடவுளிடம் போய்த்தான் அதற்கு இணையான தங்கத்தை நாம் வாங்கி கொள்ள வேண்டும்.

ஆனால் இந்திய ரூபாய் நோட்டுக்களில் I PROMISE TO PAY THE BEARER THE SUM OF --- RUPEE என்றிருக்கும். ஆனால் உத்தரவாதம் இல்லாத அப்படிப்பட்ட ஒரு அமெரிக்க டாலரை உலக நாடுகள் எப்படி கரன்சியாக ஏற்றுக்கொண்டன? இன்னும் ஏன் அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்கின்றன? அதற்கு காரணம் அதன் ராணுவ பலமே!

அதன் பொருளாதாரம் வீழும்போதெல்லாம் உக்ரைன் போல ஒரு போரை கொண்டு வந்து, கச்சா எண்ணெய் விலை ஏற்றி, டாலரின் தேவையை கூட்டி, அதை சரி செய்ய டாலர் என்ற வெற்று பேப்பரை பிரிண்ட் செய்து கொள்ளும்.

இதை மீறி கேள்வி கேட்டால், அல்லது டாலர் பயன்படுத்தாத நாடுகளை அணு ஆயுதம் இருக்கிறது, தீவிரவாதம் இருக்கிறது, மத சுதந்திரம் இல்லை அது இது என்று ஏதாவது காரணம் சொல்லி பொருளாதார தடையை விதிக்கும். அல்லது ஈரான், ஈராக், லிபியா நாடுகளை அளித்தது போல தாக்கி அழிக்கும். இதற்கு பதிலே இல்லையா?

இப்போது தான் இதற்கு பதில் உருவாகி வருகிறது. உலகின் டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாய் உலக கரன்சியாக மாறி வருகிறது. உலகின் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாய் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்? இரண்டாவது அமெரிக்க டாலருக்கு எதிராக மற்ற நாணயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

மற்ற நாணயங்களுக்கு எதிராக ரூபாய் வீழ்ச்சியடைந்தால், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைகிறது என்று சொல்லலாம். அதே நேரத்தில், பிரிட்டிஷ் பவுண்ட், யூரோ மற்றும் ஜப்பானிய யென் போன்ற பிற முக்கிய நாணயங்களும் அமெரிக்க டாலருக்கு எதிராக வீழ்ச்சியடையும் போது, ​​டாலர் வலுவடைகிறது

ரூபாய் பவுண்ட் விகிதம்

அக்டோபர் 2021 – 1 பவுண்ட் = ரூ 104

அக்டோபர் 2022 – 1 பவுண்ட் = ரூ 92

எனவே, கடந்த ஓராண்டில் பவுண்ட்டுக்கு எதிராக ரூபாய் வலுப்பெற்றது.

ரூபாய் யூரோ விகிதம்

அக்டோபர் 2021: 1 யூரோ = ரூ 88

அக்டோபர் 2022: 1 யூரோ = ரூ 82

எனவே, இங்கே மீண்டும், யூரோவுக்கு எதிராகவும் ரூபாய் வலுப்பெற்றது.

ரூபாய் யென் விகிதம்

அக்டோபர் 2021: 1 யென் = 0.65 ரூ

அக்டோபர் 2022: 1 யென் = 0.55 ரூ

குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போருக்கு பின்னர் மாறிய உலக சூழலில், இந்திய ரூபாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைத்து வருகிறது. உலக நாடுகள் இந்திய கரன்சியை மதிக்க தொடங்கி உள்ளன. இதன் விளைவு அமெரிக்க டாலருக்கு மாற்றாக பல நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கி உள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில் இந்திய ரூபாயில் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் அளவு நிலைமை மாறி விடும். காரணம் உலக நாடுகள் தற்போது அமெரிக்காவை விட இந்தியாவை அதிகம் நம்புகின்றன. இந்தியாவின் வளர்ச்சி அப்படி இருந்து வருகிறது.

டாலருக்கு எதிராக ரூபாய் துணிச்சலாக போராடுகிறது மற்றும் மற்ற நாணயங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது .



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story