வியட்நாம், பிலிப்பைன்ஸ்சில் நிறுத்தப்பட்டுள்ள பிரம்மோஸ்
இந்தியா இருபெரும் விஷயங்களால் கவனிக்கப்படுகின்றது. முதலாவது பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகள் அனுப்பப்பட்டது. இது குறித்து மோடி நேரடியாக மகிழ்ச்சி தெரிவித்தார். இது சீனாவுக்கு விடப்பட்ட மாபெரும் எச்சரிக்கை. இந்தியாவின் கிழக்கு பகுதியில் தீராத அட்டகாசம் செய்யும் நாடு சீனா. அதன் அண்டை நாட்டின் எல்லைகளிலெல்லாம் அதன் அட்டகாசம் அதிகம். அப்படி பிலிப்பைன்ஸின் பல பாகம் தனக்கு என மல்லுகட்டி நிற்கிறது. அவ்வப்போது சீன ராணுவ கப்பல்கள் மீன்பிடி கப்பல்கள் போல செல்வதும் இது சீனாவின் பகுதி என அட்டகாசம் செய்வதும் பின்னால் சீன ராணுவ கப்பல்கள் வந்து மிரட்டுவதும் அங்கு அடிக்கடி நடக்கும். பிலிப்பைன்ஸ் அமெரிக்காவுடன் இணைந்து பெரிய ராணுவ முகாம் கட்டுகின்றது. இது தவிர சீனாவை அடித்து நொறுக்க இன்னும் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
Thalaivar 171 Title இதுதானா.....? அதிரடி சரவெடியாக கொண்டாடும் ரசிகர்கள்...!
அப்படியான பிலிப்பைன்ஸுக்கு இந்தியாவின் அதிநவின பிரம்மோஸ் ஏவுகணைகள் வழங்கபடுகின்றன. இந்திய ஏவுகணைகளின் துல்லியம் உலகம் அறிந்த விஷயம். இந்த ஏவுகணைகளிடம் இருந்து சீனா தப்ப முடியாது. இதன் மூலம் இந்தியா தன் யுத்த களத்தை தொலைதூரத்துக்கு மாற்றுகின்றது. எங்கள் எல்லையில் வம்பு செய்தால் உங்கள் எல்லை முழுவதும் வம்பு செய்வோம் என துணிந்து நிற்கின்றது.
நேருவின் அணிசேரா கொள்கை இருந்த வரை இந்தியாவின் இது போன்ற நடவடிக்கைகளை நினைத்துக் கூட பார்க்க முடியாது. யாருக்கும் உதவ மாட்டோம் எந்த அணிக்கும் செல்ல மாட்டோம் என்பது அவரின் கொள்கை. இதனால் தான் சீனா கூட இந்தியாவை ஒருமுறை அடித்தது.
Thalaivar171 Title நல்லா இருக்கு...! அதென்ன D.I.S.C.O.?
மோடி அதை மாற்றி தேசத்தை பலமாக்கியிருக்கின்றார். இந்தியாவின் பலம் மிக்க பிரம்மோஸ் ஏவுகணைகள், ஏற்கனவே வியட்நாமிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்போது பிலிப்பைன்ஸில் நிறுத்தபடுகின்றன.
இனி இந்தியாவினை சீனா தாக்கினால் அவைகள் அங்கே இந்தியாவுக்கு துணையாக வரும். இந்தியாவின் பல்முனை தாக்குதலில் சீனா திணறும். இந்தியா எவ்வளவு பலமான மாற்றங்களை பெறுகின்றது என்றால் இப்படித்தான். 2026ல் சீனா இந்தியாவினை தாக்கினால் எப்படி முறியடிக்க வேண்டும் எனும் வியூகங்கள் வகுக்கப்பட்டு களத்தை இப்போதே இந்தியா தயாராக வைத்துள்ளது. எதிர்பார்த்ததை போன்று சீனா தாக்கினால், அந்த நாடு கனவிலும் எதிர்பார்க்காத மரணஅடியினை இந்தியா கொடுக்க தயாராகி விட்டது.
Thalaivar 171 கமலுக்கு ஒன்னு ரஜினிக்கு ஒன்னு..! நைஸ் லோகி..!
அடுத்து அமெரிக்க பாராளுமன்றத்தில் அமெரிக்க பாதுகாப்புதுறை செயலாளர் லாயிட் ஆஸ்டின் கொடுத்துள்ள அறிக்கை முக்கிய கவனம் பெறுகிறது. அமெரிக்க வழக்கப்படி அங்குள்ள சபையில் அமெரிக்க பெரிய தலைகள் தங்கள் துறைசார்ந்த நடவடிக்கைகளை விளக்க வேண்டும். அதன்படி லாயிட் ஆஸ்டின் கடந்த ஜூலையில் மோடி அமெரிக்கா சென்று அமெரிக்க பாராளும்னறத்தில் உரையாற்றி புதிய இந்திய அமெரிக்க உறவை தொடங்கி வைத்தார்.
அதன்படி இந்தியாவுடன் பல தொழில்நுட்பங்களை அமெரிக்கா பரிமாறுகின்றது. அமெரிக்காவின் விமான எந்திர நிறுவனங்கள் இந்தியாவின் எ.ஏ.எல் நிறுவனத்துடன் சேர்ந்து சக்திமிக்க விமானங்களை தயாரிக்கின்றது. பெரும் பாதுகாப்பு கவச வாகனம் கருவிகளை தயாரிக்கின்றது. இந்தியா அமெரிக்காவுக்கு நெருங்கிய நட்புநாடு எனும் வகையில் அந்நாட்டின் ராணுவ வளம் மற்றும் நவீன கருவிகளை எந்திரங்களை அவர்களோடு சேர்ந்து தயாரிக்கின்றோம். இதனால் இந்தியாவின் வலிமைக்கு அமெரிக்கா துணை நிற்கும் என பேசியிருக்கின்றார்.
உலக அரங்கில் இந்தியா தவிர்க்க முடியாத தேசமாக மாறிவிட்டது. உலகின் மகா பலமான தேசத்தில் ஒன்றாக இந்தியா மாறி விட்டது. இதன் மூலம் இனி சீனா கனவிலும் இந்தியாவினை மிரட்ட முடியாது என்பதும் தெளிவாக தெரிகின்றது. மோடியால் வந்தது இந்த பலம், அவரே புதிய வலுவான இந்தியாவினை உருவாக்கியிருகின்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu