இந்தியா ஐந்தாவது பொருளாதார வல்லரசு என்ற இடம் பெற்றது எப்படி..?
இந்தியாவின் பொருளாதார வளம் குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி.
60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியிலும் 10 ஆண்டுகள் பிஜேபியின் மோடி ஆட்சியில் இந்திய நாட்டின் முன்னேற்றத்தை ஒப்பிட்டு பார்க்கலாம். அறுபது ஆண்டுகள் காங்., ஆட்சியில் இந்தியாவில் தங்கம் கையிருப்பு 500 டன்னாக இருந்தது. அடுத்து வந்த பா.ஜ.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் தங்கம் கையிருப்பு 300 டன் அதிகரித்து 800 டன்னாக உயர்ந்தது. 60 ஆண்டுகள் காங்., ஆட்சியில் இந்தியாவில் வெளிநாட்டு கரன்சிகள் கையிருப்பு 22 லட்சம் கோடி மட்டுமே இருந்தது. 10 ஆண்டு மோடி ஆட்சியில் கையிருப்பு 28 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து மொத்த இருப்பு 50 லட்சம் கோடிகளாக அதிகரித்தது.
அதேபோல் இந்தியாவின் மொத்த ஜிடிபி 60 ஆண்டுகளில் 150 லட்சம் கோடியாக இருந்தது. 10 ஆண்டு மோடியின் ஆட்சியில் உள்நாட்டு மொத்த ஜிடிபி 380 லட்சம் கோடியாக அதிகரித்தது. இப்படி மூன்று துறைகளிலும் வளர்ச்சி அபரிமிதமாக அதிகரித்தது. இந்த வளர்ச்சியை அதிகரித்து ஐநாவின் அமைப்பான ஐஎம்எப் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் உலக அளவில் அது பெற்றுள்ள இடத்தையும் முடிவு செய்கிறது. இந்த கணக்குப்படி இந்தியாவை உலக அளவில் ஐந்தாவது பொருளாதார பலம் வாய்ந்த நாடாக அறிவித்தது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu