ராணுவக் கருவிகள், விமானங்களை சொந்தமாக தயாரிக்கும் இந்தியா
இப்போது ராணுவ போக்குவரத்துக்கான ஜம்போ விமானங்களை தயாரிக்க முதல் படி வைத்தாகி விட்டது. அதாவது "மேக் இன் இந்தியா" திட்டபடி ஸ்பெயின் ஏர்பஸ் நிறுவனமும் இந்தியாவின் டாடா நிறுவனமும் இணைந்து ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்தன. இந்தியா முதன் முதலில் தயாரிக்கும் பிரமாண்ட ராணுவ போக்குவரத்து விமானம் இது.
அதாவது தாக்குதல் விமானங்களான தேஜஸ் போன்றவை வேறு வகை. அவை அதிவேக தாக்குதல் விமானங்கள். இதில் இருவர் மட்டும் பயணம் செய்யலாம். ஆனால் போக்குவரத்து விமானங்கள் அளவில் பிரமாண்டமானவை. போர்க் காலத்தில் துருப்புகள், டாங்கிகள் ஏற்றி செல்லுதல், இதர பொருட்களை ஏற்றி செல்லுதல் என இதன் தன்மை மாறுபட்டது. சாதாரண பயணிகள் விமானத்தை விட இவை பிரமாண்டமானவை.
இந்தியாவிடம் ரஷ்யாவின் அனடோவ் ரக விமானமும் அமெரிக்காவின் ஹெர்குலஸ் ரக விமானமும் உண்டு. இவை ஒப்பந்த அடிப்படையிலானவை. இதன் பெரிய விலை காரணமாக வாங்குதல் என்பது கடினம். சில விமானங்கள் வாங்கப்பட்டது என்றாலும் ஒப்பந்த விமானமும் உண்டு. இங்கு செலவிடப்படும் பணம் மிக அதிகம்.
சீன எல்லையில் யுத்தமென்றால் இந்த விமானங்கள் தான் கைகொடுக்கும் என்பதால் இவற்றின் தேவை மிகவும்க அதிகம். அவற்றை இந்தியாவிலே தயாரிக்க மோடி அரசு முடிவெடுத்தது. இதற்கான திட்டங்கள் தயாராகின. அதன்படி குஜராத்தில் டாடா - ஏர்பஸ் விமான உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்ஜெஷ் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதன் மூலம் சி295 ரக விமானங்கள் 56 தயாரிக்கப்பட இருக்கின்றன. இதனால் இந்திய ராணுவம் இனி புதிய பலம் பெறும். செலவும் பெருமளவில் கட்டுப்படுத்தபட்டது. இதன் அடுத்த பரிணாமம் பயணிகள் விமானம் செய்வது. உலகில் பயணிகள் விமானம் செய்யும் நாடுகள் அமெரிக்காவின் போயிங்க் கம்பெனியும் பிரான்சின் ஏர் பஸ் நிறுவனமும் மட்டுமே.
மற்ற எந்த கொம்பர்களிடமும் பயணிகள் விமானம் செய்யும் நுட்பமில்லை. ரஷ்யா இதில் பின்னடைந்தது. சீனா சில முயற்சிகளை செய்தது. வழக்கம் போல் பறக்கவில்லை. அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
எல்லாம் சரியாக இருந்தால் அடுத்த 10 ஆண்டுகளில் டாடா ஏர்பஸ் பயணிகள் விமானம் இந்திய தயாரிப்பாக வெளிவரும். பயணிகள் விமானம் செய்யும் மூன்றாம் நாடு எனும் நிலையினை இந்தியா அடையும். அந்த பெரும் இலக்கை நோக்கி மோடி தேசத்தை அழைத்து செல்கின்றார். தேசம் புதிய யுகத்தில் நுழையும் தருணம் இது.
ஆக மோடியின் வெளிநாட்டு பயணங்கள் இப்படி நல்ல விஷயத்தை நாட்டுக்கு கொண்டு வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu