தெற்காசியா முழுவதும் நானே ராஜா... நிரூபித்த இந்தியா..!

தெற்காசியா முழுவதும் நானே ராஜா... நிரூபித்த இந்தியா..!
X

மாலத்தீவு அதிபருடன்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுப்பிரமணி.

தெற்காசியாவில் தானே ராஜா. என்னை மீறி எதுவும் நடக்காது என இந்தியா நிரூபித்துள்ளது.

சீனாவின் முத்துமாலை திட்டத்தை இடையில் அறுத்துப்போட்டு விட்டது இந்தியா. முத்துமாலை திட்டம் வெட்டப்பட்டதால் கலங்கி நிற்கிறது சீனா.

உலக அளவில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக வல்லாதிக்கம் செலுத்தி வரும் நாடுகளில் முதல் இடத்தில் இருந்து நமது மதிப்பிற்குரிய எதிரி நாடு சீனா. சீனாவிற்கு எப்போதுமே இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது தான் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது. இதற்காக ஆசிய பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவுடன் நட்புறவில் இருந்து வரும் நாடுகளில் ஏதாவது குழப்பம் விளைவிப்பதை சீனா வாடிக்கையாக கொண்டு இருக்கிறது.

அப்படி அது குழப்பம் விளைவிப்பதற்காக ஸ்கெட்ச் போட்ட நாடுகளில் ஒன்று தான் மாலத்தீவு. மாலத்தீ ஒரு நாடு என்பதை விட இந்தியாவின் அருகில் உள்ள குட்டித்தீவு என்பதே சரியானது.


இதுவரை சீனாவின் நட்பு வட்டத்தில் இருந்த மாலத்தீவு தற்போது தங்களது கட்டுப்பாட்டில் உள்ள 28 தீவுகளை இந்தியாவிடம் குடிநீர் உற்பத்திக்காக கொடுத்து விட்டோம் என சொல்லியிருக்கிறது. இதன் மூலம் அந்நாடு இந்தியாவின் நட்பு வளையத்திற்குள் வந்து விட்டது என்பதை வெளிப்படையாக சொல்கின்றது.

இந்தியாவின் நட்பு வளையத்திற்குள் சும்மா விழவில்லை. சுமார் ஆயிரம் கோடி ருபாயினை வாங்கிக்கொண்டு விழுந்து விட்டார்கள். மாலத்தீவில் இந்திய கடற்படை தளம் சுமார் 200 வீரர்களோடு இருந்தது. அதை தாண்டி "சிக்நெட்" எனப்படும் சிக்னல்களுக்கான சில கோபுரங்கள் இருந்தன. இது மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.

இது சீனாவின் கண்களை உறுத்தியது. காரணம் அவர்களின் 2006ம் ஆண்டு முத்துமாலை திட்டமானது வங்கதேசம், இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான் என ஒரு கடல் வளையத்தில் இந்தியாவினை முடக்குவது.

அவர்கள் இப்படி திட்டமிட்டபோது காங்கிரஸ் இந்தியாவினை ஆண்டது. மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய முக்கிய தலைவர்கள் பலர் அமைதி காத்தார்கள். சீனாவின் முற்றுகைக்குள் இந்தியா வந்தது. (அப்போது நடந்த வெளியிடக்கூடாத, ஆனால் அரசியல் அரங்கில் பகிரப்படும் ஒரு கருத்தை நாகரீகம் கருதி தவிர்த்திருக்கிறோம்).

மோடி எல்லாவற்றையும் மாற்றினார். ஒவ்வொரு நாடாக வழிக்கு கொண்டு வந்து அந்த முத்துமாலையினை வெட்டினார். அப்படி இலங்கையில் புரட்சி, வங்கத்தில் புரட்சி என சீன ஆதரவுகள் எல்லாம் வெட்டபட்டன. மாலத்தீவு மட்டும் அடம் பிடித்தது. சில மாதங்களுக்க்கு முன்பே இந்திய கடற்படை இனி அங்கு இருக்கக் கூடாது என சொல்லி அழுத்தம் கொடுத்தது மாலத்தீவு. அதன் பின்னால் முதுகில் துப்பாக்கி வைத்த படி மிரட்டியது சீனா.

இந்தியா அதனை புன்னகையுடன் பார்த்தது. மோடி அதன் பொருளாதாரத்தை அடிக்க இந்தியாவின் லட்சத்தீவில் கால் வைத்தார். சுற்றுலா ஒன்றை பெரிதும் நம்பிய மாலத்தீவு இந்தியாவின் புறக்கணிப்பால் அலறியது. மேற்கொண்டு இந்தியா அடித்த அடியில் அங்கு பொருளாதாரம் படுத்தே விட்டது

மாலத்தீவில் மழை பெய்யும் தான் ஆனால் தீவுகள் அதிகம். இதனால் இணைப்புகள் சிக்கலானவை. அதனால் குடிநீர் தட்டுப்பாடு எப்போதும் அதிகம் உண்டு. இப்படியான மாலத்தீவு அடிக்கடி குடிநீர் சிக்கல் வரை எதிர்கொள்ளும் இப்போது சீன கடன் மற்றும் சுற்றுலா அடியில் மொத்தமும் விழுந்து விட்டார்கள்.

சீனா செத்துக்கிடப்பவனிடம் சட்டைபையில் வட்டி காசு இருக்குமா? அவன் கிட்னி முதலுக்கு வருமா என பார்க்கும் நாடு, அதன் தன்மை அப்படி. இதனால் சீனாவினை நம்பினால் இனி இதயம் கூட மிஞ்சாது எடுத்து விற்று விடுவார்கள் என அலறிய மாலத்தீவு இந்தியாவிடம் சரணடைந்தது. இந்தியா இன்னும் பல விளையாட்டுக்களை ஆடி அவர்களை தன் காலில் விழவைத்து விட்டது.

ஓரிரு நாட்களுக்கு முன்னர் மாலத்தீவு தனது 28 தீவுகளை குடிநீர் தேவைக்கு இந்தியாவிடம் ஒப்படைப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா இதற்காக சுமார் ஆயிரம் கோடி நிதி அறிவித்துள்ளது.

இனி என்னாகும் என்றால் இலங்கையின் திரிகோணமலை துறைமுகம். எண்ணெய் குடோன் என எல்லாம் இந்தியாவின் கட்டுபாட்டில் இருப்பது போல இனி மாலத்தீவின் முக்கிய தீவுகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதே இந்திய கடற்படை தளம் அங்கே இருக்கும். சீனா இந்த கடல்மாலை சூதாட்டத்தில் தோற்றுவிட்டதாக கதறி கொண்டிருக்கின்றது.

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவினை சுற்றிவளைத்த சீனாவின் சங்கிலியினை இந்தியா மொத்தமாக உடைத்து விட்டது. இனி கடல்வழி சங்கிலியில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படும். ஆக மோடி மாலத்தீவில் இந்திய நலனை கெடுத்து விட்டார் என குபீர் தேசப்பற்று பேசிய சில தன்மான (அ)சிங்கங்களின் மனம் இப்போது எப்படி இருக்கும் தெரியுமா?

சரி, இந்தியாவை மீறி சீனாவுக்கு இடமளித்து இலங்கை, வங்கதேசம், பர்மாவை தொடர்ந்து மாலத்தீவும் பாடம் கற்றுக் கொண்டது. தெற்காசியாவில் நானே ராஜா... என இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil