யாரையும் எதிர்பார்க்கும் நிலை இல்லை : இந்தியா திட்டவட்டம்..!

யாரையும் எதிர்பார்க்கும் நிலை இல்லை :  இந்தியா திட்டவட்டம்..!
X

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 

உலக நாடுகளில் யாரையும் எதிர்பார்த்து நிற்கும் நிலையில் இந்தியா இல்லை என ஜெய்சங்கர் சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறியுள்ளார்..

ஜெய்ஷங்கர் ஜப்பானில் க்வாட் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அங்கே பத்திரிகையாளருக்கு அவர் அளித்த பதில்கள், மேலை நாட்டினருக்கு பாடம் எடுக்கும் வகையில் இருந்தன. அதில் சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம்.

அமெரிக்காவில் தேர்தலில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து இந்தியாவின் நிலை என்ன?

ஓரு ஜனநாயக நாடு, இன்னொரு ஜனநாயக நாட்டில் நடக்கும் குழப்பங்களை வைத்து, ஆதாயம் தேடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அப்படிப்பட்ட செயல்களை எங்களிடம் எதிர்பார்க்காதீர்கள்.

பிரதமர் மோடி உக்ரைன் செல்கிறாரே, யுத்தத்தை நிறுத்தி வைக்க என்ன செய்யப் போகிறார்?

மோடி உக்ரைன் செல்வதும் ராஷ்யா சென்றதும், இரு நாட்டிற்கு இடையேயான நல்லுறவை, வியாபாரத்தை, புரிந்துணர்வை மேம்படுத்தவே. நீங்களாக கற்பனை செய்துக் கொண்டு இப்படி ஆகவில்லை என்று பின்னர் எழுதுவதை நிறுத்திக் கொள்ளூங்கள். அங்கே என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதை சரியான நேரத்தில், சரியான இடத்தில் சொல்லும்வரை அமைதியாக இருங்கள்.

சீனாவுடன் உறவு சீர்குலைகிறதா? அதனை சரி செய்ய அமெரிக்க உதவி கேட்கிறீர்களா?

யாருடன் எப்படி, என்ன விதத்தில் உறவு கொள்வது என்பதை இந்தியாவுக்கு சொல்லித் தரவேண்டியது இல்லை. எங்கள் பிரச்சினைகள் எந்த நாட்டுடன் இருந்தாலும் அதனை நாங்களே பேசித் தீர்ப்போம். எல்லாவற்றிர்க்கும் யாரையாவது எதிர்ப்பார்க்கும் நிலைமையில் இந்தியா இல்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதில் முக்கியமானது என்னவென்றால், இந்த பேட்டியின் போது, அருகில் அமெரிக்க, ஆஸ்திரேலிய, ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உட்கார்ந்து கொண்டிருந்தனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்