எரிபொருள் சிக்கனம்: மாபெரும் புரட்சிக்கு தயாராகிறது இந்தியா
பைல் படம்
இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல் எரிபொருள். குறிப்பாக வாகனங்களுக்கான எரிபொருள். இந்தியாவில் இல்லாத முக்கியமான வளம் எரிபொருள் வளம் என்பதால் இறக்குமதி மட்டுமே ஒரே வழி.
அவ்வகையில் பெரும் பணம் நம் நாட்டில் இருந்து வெளியே செல்கின்றது. எண்ணெய் நிறுவன ஊழியர்கள், அதிகாரிகள், பணியாளர்களின் சம்பள உயர்வால் நிலைமை இன்னும் சிக்கல் இப்படி ஏகபட்ட சிக்கல் சங்கிலிகள் உண்டு. இதனால் இந்தியாவில் எண்ணெய் விலை அதிகம். மாநில அரசின் வரியால் இன்னும் அதிகம். இப்போது உக்ரைன் ரஷ்ய போரால், இந்தியாவிற்கு சாதகமான நிலை உருவாகி, எண்ணெய் விலை மாற்றமில்லாமல் உள்ளது. போர் நின்று விட்டால் அல்லது ரஷ்ய எண்ணெய் மாற்று சந்தையினை தேடிவிட்டால் இந்தியாவின் நிலைமை தவிப்புக்குள்ளாகும்.
இதனால் இப்போதே ஒரு முடிவெடுக்க பாஜக அரசு விரும்புகின்றது. பெட்ரோலை மிச்சபடுத்த எத்தனாலை அதிக அளவில் சேர்க்கும் திட்டம் அரசிடம் இருக்கின்றது. இதனால் விவசாய உற்பத்தி அதிகமாகும் பெட்ரோல் தேவை குறையும். இதனை பிரேசில் போன்ற பலநாடுகள் நடைமுறைபடுத்தியுள்ளன.
அப்படியே மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது, நகரங்களுக்கு உள்ளே வெளியே பொதுபோக்குவரத்துகளை ஊக்குவிப்பது என ஏகபட்ட திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இதெல்லாம் சரியாக நடந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 ரூபாய் வரை கீழே இறங்கும். ஆண்டிற்கு இந்தியாவிற்கு 16 லட்சம் கோடி ரூபாய் மிச்சமாகும். இந்த பணத்தை இந்திய விவசாயிகளுக்கு எத்தனால் உற்பத்திக்கு திருப்புவோம் என்கின்றார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி. இது மாபெரும் புரட்சி திட்டம். இதுமட்டும் சாத்தியமானால் எதிர்கால இந்தியா உலகின் மாபெரும் சக்தியாகும்.
ஆனால் சர்வதேச எண்ணெய் கம்பெனிகள் மிரட்டல், உள்ளூர் எண்ணெய் டீலர்கள் இன்னபிற கோஷ்டிகளை சமாளித்து இதனை கொண்டுவருவது கொஞ்சம் சிரமம் என்றாலும் மோடி அரசுக்கு எல்லாம் சாத்தியம்.
இனி இந்திய விவசாயத்துறை உணவை மட்டுமல்ல எரிபொருள் சந்தையாகவும் மாறும். அது நாட்டிற்கு மாபெரும் திருப்பத்தை கொடுக்கும். மிகவிரைவில் மாபெரும் பசுமை புரட்சிக்கு தயாராகின்றது இந்தியா என்பது மட்டும் புரிகின்றது. எதிர்கால இந்தியா மாபெரும் வளமாக அமையப்போவது நிச்சயம். அதற்கு மோடி அரசு கண்டிப்பாய் அவசியம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu