செமி கண்டக்டர்களில் கோலோச்சும் இந்தியா

செமி கண்டக்டர்களில் கோலோச்சும் இந்தியா
X
செமிகண்டக்டர்களின் பயன்பாடு செல்போன்களுக்கு மாத்திரமே என நினைத்து கொண்டு விடவேண்டாம். மின்னணு உபகரணங்கள் அத்தனையிலும் இந்த செமிகண்டக்டர்ஸ் உள்ளது.

சரி அதென்ன செமிகான்.??? இன்றைய இணைய உலகின் அத்தியாவசிய உயிர்நாடி இந்த செமிகண்டக்டர் சிப்செட்கள் தான். அதிலும் நானோ தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட சூப்பர் செமிகண்டக்டர் தான் இன்றைய இணைய உலகை கட்டி ஆள்கிறது. இதில் இன்றைக்கு தைவான் முன்னோடியாக திகழ, தாமதமாக விழித்துக் கொண்ட அமெரிக்கா ஆலாய் பறக்கிறது., ஒன்றும் பருப்பு வேகவில்லை., காரணம் சீனா உள்ளே புகுந்து அதகளம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் சீனர்கள் அமெரிக்கர்களை முந்தி இருக்கிறார்கள். சரியாக சொல்வதென்றால் அமெரிக்கா கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் பின் தங்கி இருப்பதாக புள்ளி விவர தரவுகள் சொல்கின்றன. அப்படி என்றால் என்ன மாதிரியான விளைவுகளை இது ஏற்படுத்தக்கூடும்

இந்த விஷயம் புரிந்து கொள்ள வசதியாக, உலகின் முன்னணி நிறுவனமான ஆப்பிள் ஐபோன் தனது ஐபோன் 16 வெளியிட இருக்கிறார்கள். என்ன மாதிரியான மேப்படுத்தல்களை அதில் புகுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தவர்களுக்கு பயங்கர அதிர்ச்சி காத்திருந்தது. ஒரேயொரு பட்டனை அதிகப் படியாக சேர்த்து விலையை மாத்திரம் ஏகத்திற்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

சரி அந்த பட்டன். சிறப்பு வாய்ந்த AI தொழில்நுட்ப பண்புகளை சேர்த்திருப்பதாக சொன்னாலும், அதனை கூகுள் மற்றும் சாம்சங் நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய செல்போன் தயாரிப்பில் இணைத்து விட்டனர் என்கிறார்கள் விஷயம் அறிந்த வட்டாரங்களில்.

ஆக ஆப்பிள் ஐபோன் 16 அநேகமாக நொண்டும் என்கிறார்கள் நுகர்வோர் வட்டாரங்களில். இது ஒரு சான்று தான். இந்த உலகில் இன்றைய தேதியில் சாமானியனின் கைகளில் இருக்கும் அதிகபட்ச தொழில்நுட்ப திறன்களை கொண்ட ஒரு எந்திரம் என்றால் அது செல்போன் தான். அதில் பிரதான பங்கு வகிக்கிறது அதன் சிப் செட்.

இன்றைய தேதியில் 5 நானோமீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட் தான் இந்த உலகை தன் வசம் வைத்திருக்க..... நம் இந்தியாவில் டாடா குழுமத்திற்கு சொந்தமான நிறுவனத்தில் 3 நானோ மீட்டர் தொழில்நுட்ப பண்புகளை கொண்ட சிப் செட்டை உருவாக்கி தயாரித்து தயார் செய்ததை உலகின் முன்னணி நாடுகளின் உள்ள தலைசிறந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு கொடுத்து அதன் செயல் திறனை சோதித்துக் கொள்ள சொல்ல பார்த்தவர்கள் மிரண்டு போய் இருக்கிறார்கள்.

அதி அற்புதமான செயல்பாடுகளை கொண்டுயிருப்பதாக அவர்கள் சிலாகித்து வருகிறார்கள். ஆக நம்மவர்களுக்கு இது ஒரு மைல் கல் சாதனையாகும். இதனோடு கூடவே 6G தொழில்நுட்ப பண்புகளை கொண்ட ஆன்ட்ராய்டு வெர்ஷன் 17 உருவாக்கி அதனை காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

3 நானோமீட்டர் அலகு கொண்ட சிப் செட்டில் 6G தொழில்நுட்ப பண்புகளில் இயங்கும் இணையத்தளம், தற்போதைய உலகின் முன்னணி ஜப்பானிய தொழில்நுட்ப பண்புகளை ஓரம் கட்டி முன்னிலை பெற்று விடும் என கணித்திருக்கிறார்கள். இன்றைய தேதியில் ஜப்பான் மட்டுமே 400 டெராபிட்டில் இயங்கும் இணையதள வசதிகளை கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. நம்மூர் கணக்கில் எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட 12000 படங்களை நொடிப்பொழுதில் தரவிறக்கம் செய்யும் வல்லமை இது காட்டுகிறது.

செமிகண்டக்டர்களின் பயன்பாடு ஏதோ செல்போன்களுக்கு மாத்திரமே என நினைத்து கொண்டு விடவேண்டாம். மின்னணு உபகரணங்கள் அத்தனையிலும் இந்த செமிகண்டக்டார்ஸ் உள்ளது. மின்னணு சாதனங்கள் இன்று உலகம் முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பது கவனித்தில் கொண்டால் இதன் நீள வீச்சு புரியும்.

நம்மவர்கள் இன்னமும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி இந்த செமிகண்டக்டர்ஸை பாதிப்படைய செய்யும் மின்காந்த புலங்களை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட உபகரணங்களையும் உருவாக்கி சோதனை செய்து வருகிறார்கள். நவீன உலகின் போர்முனையில் இனி மின்னணு சாதனங்களே கோலோச்சப்போகிறது என்பதை அனுமானித்து அதற்கேற்ப முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நம்மவர்களின் துல்லியதிறனுக்கான எடுத்துக் காட்டாக நிலவுக்கு பல நாடுகளிலும் செயற்கைக்கோள்களை அனுப்பியிருந்தாலும்..... நிலவில் தண்ணீர் இருப்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தது நம் இந்திய தேசம் தான். அதுபோலவே பலரும் அங்கு புகைப்படங்கள் எடுத்து அனுப்பிய போதிலும் நாம் எடுத்த புகைப்படங்களுக்கும் அவர்களுக்குமே நிறையவே வித்தியாசம் இருக்கிறது.

ஆக இதற்கான விதை ஊன்றிடப்பட்டது இன்று நேற்று அல்ல. முளைவிட்ட துளிர் மட்டுமே தற்போது நம் கண்களுக்கு தெரிகிறது. இன்னமும் வளர வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை மட்டுமே உண்மை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!