இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும்
X

இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த குறியீடு.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.1 சதவீதமாக இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில், 10.1 சதவீதமாக இருக்கும் என்று இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதே நிறுவனம், இதற்கு முன்னர் இந்திய பொருளாதார வளர்ச்சி, 10.4 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால், தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவல், குறைவான வேகத்தில் போடப்படும் தடுப்பூசி போன்ற காரணிகள் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று அந்த நிறுவனம் கணித்துள்ளது. நாட்டின் மருத்துவ கட்டமைப்புகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகிறது. தற்போது பரவி வரும் இரண்டாவது அலை, மே மாத நடுப்பகுதியில்தான் குறைய துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாத துவக்கத்தில் ரிசர்வ் பேங்க், இந்திய பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தது. ஆனாலும், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அதிகரித்து வரும் நோய் தொற்று பொருளாதார மீட்சிக்கு தடையாக இருக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார். தற்போது பல நிறுவனங்கள் முந்தைய கணிப்பை குறைத்து அறிவித்து வருகின்றன.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!