இங்கிலாந்தில் வைரஸ் பரவல் எதிரொலி பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க இந்தியா தடை

இங்கிலாந்தில் வைரஸ் பரவல் எதிரொலி   பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க இந்தியா தடை
X

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பிரிட்டனை சேர்ந்த விமானங்கள் தரையிறங்க இந்தியா தடை விதித்துள்ளது.

தெற்கு இங்கிலாந்து பகுதியில் கொரோனா வைரஸின் ஒரு புதிய வகை வேகமாகப் பரவிவருகிறது. இதனால் நேற்று இரவு முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது. புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவி வருவதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.பிரிட்டனில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகளும் சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு தடைவிதித்துள்ளன. அந்த வகையில் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்கள் தரையிறங்க இந்தியாவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!