Independence Day Tattoo Idea in Tamil-சுதந்திர தினம் கொண்டாட டாட்டூ குத்துங்க..! தேசப்பற்றை உணர்த்துங்க..!

Independence Day Tattoo Idea in Tamil-சுதந்திர தினம் கொண்டாட டாட்டூ குத்துங்க..! தேசப்பற்றை உணர்த்துங்க..!
X

-மூவர்ணக்கொடி டாட்டூ 

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்திய நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடவுள்ளோம். நமது தேசப்பற்றை டாட்டூ மூலமாக வெளிப்படுத்துவோம் வாங்க.

Independence Day Tattoo Idea in Tamil, Independence Day Tattoo Idea,Tri-Colour Tattoo inspiration to showcase patriotism, 77th Independence Day, Independence Day 2023

சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காலம் நெருங்கி விட்டது. எப்படி புதுமையாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்று உற்சாகமகா இருக்கும் இளவட்டங்களுக்கு புதிய டாட்டூ (பச்சை குத்தல்) அறிமுகமாகியிருக்கிறது.

தேசப்பற்றை வெளிப்படுத்துவதற்கு சில நவீன டாட்டூ அறிமுகமாகியுள்ள. இந்த ஆண்டு, ஆகஸ்ட் 15 அன்று, இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்து இந்தியா சுதந்திரம் அடைந்ததையும், சுதந்திர நாடாக உருவானதையும் கொண்டாடும் இந்த வரலாற்று நிகழ்வுக்கு இந்தியர்கள் பெரும் முக்கியத்துவம் அளித்து கொண்டாடி வருகின்றனர்.


சுதந்திர தினம் என்பது ஒரு தேசிய கொண்டாட்டம். அன்றைய தினம் தேசிய விடுமுறையாகும். இது நாடு முழுவதும் மிகுந்த ஆர்வத்துடனும் தேசபக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரர்களை கௌரவிக்கும் வகையில் கொடியேற்றும் நிகழ்வுகள் , அணிவகுப்புகள் போன்றவை நடக்கின்றன.

இந்த தேசபக்தி உணர்வை வெளிப்படுத்தும் ஒரு தனித்துவமான வழி, காவி, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களாகும். ஆமாம் இது நமது தேசியக் கொடியை பிரதிபலிக்கும் நிறங்கள் ஆகும். இந்த மூன்று வண்ணங்களை பச்சை உள்ளடக்கி ஒரு முழு உருவத்தை டாட்டூ குத்திக்கொள்ளல் புதிய ட்ரெண்ட் ஆகும்.

இந்த டாட்டூக்கள் இந்தியாவின் செறிந்த பாரம்பரியம், சுதந்திரம் மற்றும் முன்னேற்றத்தை நோக்கிய பயணத்தின் துடிப்பான சின்னங்களாக இருக்கின்றன. உங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் அற்புதமான மற்றும் பார்ப்பதற்கு அழகான டாட்டூக்கள் இங்கே தரப்பட்டுள்ளன :


சுதந்திர தினத்திற்கான மூவர்ண டாட்டூ

1. தேசியக் கொடி

உங்கள் தேசபக்தியையும் உங்கள் தேசத்தின் மீதான பற்றுதலைக் காட்ட இந்திய தேசியக் கொடி டாட்டூவாக குத்தலாம். பல விஷயங்களை உணர்த்துவதற்கு ஒரே வழியாக மூவர்ணக்கொடி அமைந்துவிடும். மூவர்ண கொடியின் நடுவே அசோக சக்கரத்துடன் இந்தியக் கொடியின் டாட்டூ சிறப்பாக இருக்கும். இதை சிறிய அளவாக உங்கள் முன்கை அல்லது மணிக்கட்டில் குத்தலாம்.

2. நவீனமான மூவர்ணக் கொடி

இந்தியக் கொடி

நீங்கள் பரிசோதனை செய்ய விரும்புபவராக இருந்தால், பாரம்பரிய மூவர்ணக் கொடிக்கு நவீன வடிவம் கொடுங்கள். உங்கள் கட்டுமஸ்தான உடலில் மை கொண்டோ அல்லது டாட்டூவாகவோ திறமையான டாட்டூ ஆர்ட்டிஸ்ட் மூலமாக வரையலாம். அசோகச் சக்கரத்துடன் தொடங்குங்கள். அதை நீங்கள் விரும்பும் அளவுக்கு பெரிதாக்கிக் கொள்ளலாம். அது தெளிவாகவும், பிரகாசமாகவும், துல்லியமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பின்னர் மேலே காவி நிறத்தை பயன்படுத்தவேண்டும். அதைத் தொடர்ந்து கீழே பச்சை நிறத்தைப் பயன்படுத்தவும். பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அதே வண்ணங்களைக் கொண்ட சில செங்குத்து கோடுகளை சிதறடித்து விடுங்கள்.


3. மணிக்கட்டில் மூவர்ண கலர் பேண்ட் டாட்டூ

மூவர்ண மணிக்கட்டுப் பகுதியில் பட்டையாக டாட்டூ தேசத்தின் அடையாளத்தைக்கட்டும். இந்தியக் கொடியின் காவி நிறம் வெள்ளை மற்றும் பச்சைப் பட்டைகளைக் கொண்ட பேண்ட் டாட்டூக்கள் தேசத்தின் மீதான சக்திவாய்ந்த வெளிப்பாடாகும். பேண்ட் டாட்டூக்கள் இந்த நேரத்தில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருப்பதால், உங்கள் தேசபக்தி உணர்வை புதுப்பாணியாக வைத்துக்கொள்ள இதுவே சரியான வழியாகும். உங்கள் மணிக்கட்டில் அல்லது முன்கையில் மூவர்ண டாட்டூ குத்தலாம்.


4. அசோகச் சக்கரம்

இந்தியக் கொடியின் நடுவில் 24 ஆரங்கள் கொண்ட சக்கரத்தின் பிரதிநிதித்துவத்துடன், அசோகச் சக்கரம் டாட்டூ இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் தேசிய அடையாளத்தை படம்பிடித்து காட்டுவதாக அமையும். இந்த டாட்டூ நாடு ஊக்குவிக்கும் கொள்கைகளை பிரதிபலிக்கிறது. வளர்ச்சி, நீதி மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை பிரதிநிதித்துவப் படுத்துவதாக இருக்கிறது.இதை எந்த இடத்தில் வேண்டுமானாலும் குத்திக்கொள்ளலாம். நீங்கள் விரும்பிய அளவில் குத்தலாம்.


5. இந்தியா வரைபடம்

பல அழகான மலர் வடிவங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திய வரைபடத்தின் கருப்பு-வெள்ளை பச்சையால் உருவாக்கப்பட்ட ஒரு கவர்ச்சியான மற்றும் குறியீட்டு கலைப் படைப்பாக ஒரு டாட்டூ குத்த விரும்பினால் அது இந்திய வரைபடத்தின் வெளிப்புறக் கோடுகளை உருவாக்கலாம்.

இந்த டாட்டூ நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமையும். அதே நேரத்தில் அதன் பன்முகத்தன்மையையும் குறிக்கிறது. தேசத்தின் புவியியல் மீதான உங்கள் அபிமானத்தையும், செழிப்பான பாரம்பரியத்தையும் இந்த ஒரு டாட்டூ மூலம் வெளிப்படுத்தலாம். பார்வைக்கு அழகாக தோற்றம் தரும் டாட்டூவாக இது இருக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!