டில்லியில் பெண்ணை இளைஞன் சுட்டு, தற்கொலை..! தகாத உறவால் வந்த வினை..!

டில்லியில் பெண்ணை இளைஞன் சுட்டு, தற்கொலை..! தகாத உறவால் வந்த வினை..!
X

துப்பாக்கியால் சுட்டு இளைஞன் தற்கொலை (மாதிரி படம்)

அந்த பகுதியில் பிறந்தநாள் விழா கொண்டாடியதால் பெண்ணை துப்பாக்கியால் சுட்டது கேட்கவில்லை என்று அக்குடியிருப்பு மக்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு தென்மேற்கு டில்லி, டப்ரி விரிவாக்கத்தில் இருக்கும் வைஷாலியில் உள்ள 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அவரது வீட்டிற்கு வெளியே 23 வயதுடைய ஒரு இளைஞன் சுட்டுக் கொன்றுவிட்டு, சில நிமிடங்களுக்குப்பின்னர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே அந்த இளைஞன் சுட்டுக் கொண்டார்.

அந்த இளைஞன் அதே குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தவர் என்று இன்று காலை விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுடப்பட்ட பெண்ணும் சுட்ட இளைஞனும் உள்ளூர் உடற்பயிற்சிக் கூடத்தில் சந்தித்துக்கொண்டதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போதில் இருந்து இருவருக்கும் நட்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பெண்ணின் மாமியார் அவர்களின் நட்பை, குறிப்பாக அவரது கணவர் ஏற்கவில்லை. அதையும் மீறி இருவரும் பழகி வந்துள்ளனர்.

பெண்ணின் கணவர் மற்றும் மாமியாருக்கு இந்த கொலை மற்றும் தற்கொலை வழக்கில் தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“ஆஷிஷ் என்ற பெயரால் முதலில் அடையாளம் காணப்பட்ட அந்த இளைஞன், ரேணு கோயல் என்ற பெண்ணைக் கொன்று தற்கொலை செய்துகொள்வதற்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கியால் பெண்ணை சுட்டு பின்னர் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஆஷிஷ்

ஆஷிஷ் எந்த தற்கொலை குறிப்பும் எழுதி வைக்கவில்லை. அதேபோல வேறு எந்த தற்கொலைக் குறிப்புகள் எதுவும் மீட்கப்படவில்லை. கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் குறித்து எங்களுக்கு உதவக்கூடிய துப்புகளுக்காக இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், அவர்களது உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களுடன் நாங்கள் பேசி வருகிறோம் ”என்று காவல்துறை துணை ஆணையர் (துவாரகா) ஹர்ஷ வர்தன் கூறினார்.

நேற்று இரவு 8.45 மணியளவில் இந்த கொலை வழக்கு குறித்து தப்ரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது என்றார் வர்தன். ஒரு போலீஸ் குழு அந்த வீட்டிற்கு வெளியே சுடப்பட்ட பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தது. வலது நெற்றிப்பொட்டில் இருந்து தலையைக் குண்டு துளைத்திருந்தது. விசாரணையில் இறந்த பெண் ஒரு இல்லத்தரசி என்பதும், அவருக்கு மூன்று குழந்தைகள் மற்றும் கணவர் இருப்பதும் தெரியவந்துள்ளது. அவரது கணவர் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் செய்வதும் தெரியவந்தது.

“கோயலை சுட்டுக் கொன்றது யார் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சிசிடிவி கேமராக்களை ஸ்கேன் செய்தனர். அப்போது ஒரு நபர் அவரை நெருங்கி அருகில் இருந்து சுட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் அந்த பகுதியை விட்டு வெளியேறிவிட்டார். சில அடிப்படை நுண்ணறிவு விசாரணைகள் மூலமாக கோயல், ஆஷிஷ் உடன் நெருங்கிப் பழகி வந்தது தெரியவந்துள்ளது. கோயலின் இந்த தகாத நட்பைப் பற்றி தெரிய வந்ததும் அவரது குடும்பத்தில் பிரச்சினைகள் எழுந்ததையும் நாங்கள் அறிந்தோம் ”என்று வர்தன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழு, கொலை நடந்த இடத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் உள்ள ஆஷிஷின் வீட்டிற்குச் சென்று அவரது குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தது. ஆஷிஷ் குறித்த விசாரணையில், மாலையில் வீட்டிலிருந்து சென்ற ஆஷிஷ், வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

போலீஸ் குழு அவரைத் தேடிச் சென்றபோது, மொட்டை மாடியில் உள்ள அவரது வலது நெற்றிப் பொட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவரது உடலைக் கண்டனர். அவரது வலது கைக்கு அருகில் ஒரு நாட்டுத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.' என்று டிசிபி கூறினார்.

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்ததால், துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கவில்லை என்று அந்தக் கட்டிடத்தில் வசிக்கும் பிற குடியிருப்புவாசிகள் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆஷிஷின் குடும்பம் உத்தரபிரதேசத்தில் உள்ள பாரௌத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

“கோயல் மற்றும் ஆஷிஷுக்கு இடையே கடுமையான பிரச்னைகள் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய புலனாய்வாளர்கள் செல்போன்களை ஸ்கேன் செய்து வருகின்றனர்.

கோயல், ஆஷிஷ் நட்பில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்று அது ஆஷிஷுக்கு பிடிக்காமல் போனதற்கும் வாய்ப்பு உள்ளது ”என்று பெயர் கூற விரும்பாத ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!