திருப்பதி கோயிலில், ஒரே நாளில் 72 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோவில் (கோப்பு படம்)
திருப்பதி, திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் முடி காணிக்கை, உண்டியலில் காணிக்கை செலுத்தி வேண்டுதல் நிறைவேற்றி வருகின்றனர். தற்போது கோயிலுக்கு வரும் பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதில் ஒரே நாளில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில் ஒரே நாளில் 71 ஆயிரத்து 894 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளது குறிபிடத்தக்கது. திருப்பதி கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தற்போது சாதாரண விடுமுறை நாட்களிலேயே 72 ஆயிரம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் தினசரி தரிசனத்திற்கு வருபவர்கள் எண்ணிக்கை இன்னும் பல மடங்கு கூடும். இதற்கேற்ப கூடுதல் வசதிகளையும், சுவாமி தரிசனத்திற்கு கூடுதல் வாய்ப்புகளையும் உருவாக்கித்தர நடவடிக்கை எடுத்து வருவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu