இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா, 3980 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா, 3980 பேர் பலி
X
இந்தியாவில் நேற்று காலை 7.30 மணி முதல் இன்று காலை 7.30 மணிவரை உள்ள 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,980 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரேநாளில் புதிதாக 4,12,262 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,980 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,30,168 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 113 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரத்து 844 ஆகவும் உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 35,66,398 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரத்து 339 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!