சாலை விபத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு: அரசின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் - சென்னை ஐஐடி பரிந்துரை

சாலை விபத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்பு: அரசின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் - சென்னை  ஐஐடி பரிந்துரை
X
பொருளாதாரத்தின் மீது சாலை விபத்துகள் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்க, சாலைப் பாதுகாப்பில் அரசின் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும் என்று ஐஐடி மெட்ராஸ் ஆய்வு பரிந்துரைக்கிறது

சாலை விபத்துகளால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தைக் குறைக்க சாலைப் பாதுகாப்பில் அரசு முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சாலைப் பாதுகாப்பிற்கான சிறப்பு மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, சாலை விபத்துகளால் அரசாங்கத்திற்கு ஆகும் செலவை மதிப்பிடுகிறது. இது பொருளாதாரத்திற்கான பாதிப்பின் அடிப்படையில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் திட்டமிடுவதற்குக் கொள்கை வகுப்பாளர்களுக்கு உதவும். இந்த ஆய்வறிக்கையை தமிழ்நாடு அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிற்றுக் கிழமை (13 மார்ச் 2022) அன்று, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி மற்றும் ஆய்வாளர்களான ஐஐடி சென்னை பொறியியல் வடிவமைப்புத் துறைப் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், மற்றும் அறிக்கையின் முதல் ஆசிரியரான அதே துறையைச் சேர்ந்த மூத்த திட்ட விஞ்ஞானி டாக்டர். நிஜினா எம் நாசர் ஆகியோர் முன்னிலையில் வெளியிட்டார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக அரசின் சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், "அனைத்து விபத்துகளிலும் மறைந்திருக்கும் அடிப்படை உண்மை, அதில் ஏற்படும் செலவுகள்தான், சென்னை ஐஐடியில் உள்ள சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் இந்த ஆய்வு, அரசுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அரசுக்கும் மக்களுக்கும் விபத்தின் மறைமுகமான இந்த இழப்புகளைக் குறித்துக் கண்டறிவதற்கும், மேம்படுத்தப்பட்ட நிதித் திட்டமிடலுக்குப் பயன்படுத்துவதற்கும், மாநிலத்தில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளில் சரியான முறையில் முதலீடு செய்வதற்கும் அரசாங்கம் இந்த ஆய்வைப் பயன்படுத்தலாம்". என்று கூறினார்.

மா சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், "ஆர்பிஜி லேப்ஸ், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு முன்னோடித் திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது" என்று தெரிவித்ததுடன் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் இதேபோன்ற பகுப்பாய்வுகளைச் செய்ய ஆராய்ச்சிக் குழுவை ஊக்குவித்தார்.

'தமிழ்நாட்டில் சாலை விபத்துகளின் சமூக-பொருளாதார செலவுகள்' என்ற தலைப்பில், ஐ ஐ டி மெட்ராஸின் சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையம் (CoERS)/ RBG ஆய்வகத்தால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது சமூக-பொருளாதார தாக்கத்தின் மூன்று வெவ்வேறு மதிப்பீடுகளுடன் வெளிவந்துள்ளது. இந்த மதிப்பீடுகள் மருத்துவச் செலவுகள், வரிவிதிப்பு வருவாய் இழப்பு, உற்பத்தி இழப்பு, மனிதச் செலவுகள், வாகனச் சேதங்கள், சிவில் சேதங்கள் மற்றும் காவல்துறை, காப்பீடு, சட்டப்பூர்வ நிர்வாகச் செலவுகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பேசிய ஐஐடி மெட்ராஸின் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, "சாலை விபத்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இருவருக்கும் அதிகபட்ச அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இங்கு நடத்தப்பட்ட ஆய்வு அவற்றை அளவிட முயற்சிப்பது மட்டுமல்லாமல், அவற்றைக் குறைப்பதற்கான முறைகளையும் சுட்டிக்காட்டுகிறது" என்றார். ஆய்வின் சிறப்பம்சங்களில், சாலை விபத்துக்களால் ஏற்படும் பயணத் தாமதச் செலவுகள் மற்றும் செயல்திறன் குறைபாடு ஆகியவை அடங்கும். இந்தப் பெரிய இழப்புகளைச் சந்தித்த அரசு, பொருளாதாரத்தை மீட்டெடுக்க சமூகத்தின் மீது சுமத்த வேண்டியுள்ள செலவுகள் இவை. இந்த ஆய்வு குறித்து விவரித்த, ஐஐடி மெட்ராஸின் பொறியியல் வடிவமைப்புத் துறையைச் சேர்ந்த, ஆர்.பி.ஜி என்னும் மறுவாழ்வு உயிரியல் பொறியியல் குழுவின் பொறுப்பாளரும் சாலை பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தின் தலைவருமான பேராசிரியர். வெங்கடேஷ் பாலசுப்ரமணியன், "சாலைப் பாதுகாப்பு குறித்த முன்னெடுப்பு முயற்சிகள். உலகளாவிய அனைத்து அரசாங்கங்களுக்கும் பொதுவானவை. தேவைப்படும் முதலீட்டின் அளவு தற்போது நலன்புரி அரசு மாதிரியின் மூலம் முடிவு செய்யப்படுகிறது. செலவில் இருந்து பொருளாதாரக் கண்ணோட்டம் வரை, இந்த ஆய்வு, கொள்கை வகுப்பாளர்களை அளவீடு செய்யவும், முன்முயற்சிகளில் அதிக இலக்கு முதலீட்டைத் திட்டமிடவும் உதவும்." என்று கூறினார்.

பேராசிரியர். வெங்கடேஷ் பாலசுப்ரமணியன் மேலும், "இன்னும் குறிப்பாக, விபத்து நடந்த இடத்தில் இருந்து பாதிக்கப்பட்டவரை வெளியேற்றுவது முதல் மறுவாழ்வு வரை பொது சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் முதலீடுகள் சமூகத்திற்கான விரிவான செலவினத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கப்படலாம். அனைத்து கொள்கை வகுப்பாளர்களும் தங்கள் முதலீடுகளின் அளவை மதிப்பிடுவதற்காக இந்த மதிப்பீடுகளைச் செய்வது அவசியமாகிறது." என்றார்.

விபத்தால் பாதிக்கப்பட்டவரின் தற்போதைய வருவாயின் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் அமைந்த கலப்பின மனித மூலதன அணுகுமுறை முறையைப் பயன்படுத்தி, நிதி அடிப்படையில் மொத்த தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. மனித செலவுகளைக் கணக்கிடுவதில் நிறுவப்பட்ட WTP மதிப்பு பரிமாற்ற முறை மற்றும் iRAP முறையைப் பயன்படுத்தி ஒரு உணர்திறன் சோதனை நடத்தப்படுகிறது. இயன்றவரை இந்த ஆய்வு உலகம் முழுவதிலும் மற்றும் இந்தியாவில் உள்ள மற்ற ஆய்வுகளையும் கருத்தில் கொண்டுள்ளது.

2019 முதல் தமிழ்நாடு மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் (SCRB) தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வின் முக்கிய முடிவுகள்:

Ø 2019 ஆம் ஆண்டுக்கான சாலை போக்குவரத்து விபத்துக்களுக்கான தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார செலவு 21,078.83 கோடி ரூபாய் முதல் 56,543.29 கோடி ரூபாய் வரை.

Ø இது மாநிலங்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.94–2.5% ஆகும்

Ø தமிழ்நாட்டின் ஒவ்வொரு சாலை உயிரிழப்புக்கான பொருளாதாரச் செலவு 87,45,154.79 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Ø சாலை விபத்தால் ஏற்படும் கடும் காயத்திற்கான செலவு 1,69,544.82 ரூபாய் என்றும் கண்டறியப்பட்டது.

Ø மேலும், இந்த அறிக்கை, தமிழக அரசுக்கான, சாலைப் போக்குவரத்து விபத்துகளின் நேரடிச் செலவு ரூ.12,912.13 கோடிக்கு மேல் என்று மதிப்பிடுகிறது.

Ø கூடுதல் சுகாதாரச் சேவைகள் இந்தச் செலவில் 2.34 சதவீதமாகும்.

Ø முழுமையான சுகாதாரம், நலன் மற்றும் குடும்ப வரவுசெலவுத் திட்டத்துக்கான ஒதுக்கீடும் சாலை விபத்துக்களால் ஏற்படும் இந்தச் செலவுகளால் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி மெட்ராஸில் உள்ள பொறியியல் வடிவமைப்புத் துறையில் உள்ள மறுவாழ்வு பயோ இன்ஜினியரிங் குழு (RBG லேப்ஸ்) என்பது மக்கள், செயல்முறைகள் மற்றும் தயாரிப்புகளின் தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக சமூக தேவையின் பல்வேறு பிரச்சனைகளில் பணிபுரியும் ஒரு இடைநிலைக் குழுவாகும். RBG லேப்ஸின் CoERS, வாகனப் பொறியியல், சாலைப் பொறியியல் மற்றும் மனித காரணிகள் பொறியியல் உட்பட சாலைப் பாதுகாப்பின் பல அம்சங்களில் செயல்படுகிறது. CoERS, சாலைப் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கும்

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!