உலகின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம்

உலகின் மிகப் பெரிய சர்வதேச விமான நிலையம்
X

பைல் படம்

உத்திரபிரதேசத்தில் அதி நவீன நானோ டிஜிட்டல் தொழில் நுட்பத்துடன் பிரம்மாண்டமான சர்வதேச விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது

இந்த விமான நிலையம் 916 சதுர மைல்கள் பரப்பளவு கொண்டது! இது ஒட்டு மொத்த நியூயார்க் & வாஷிங்டன் நகரங்களின் பரப்பளவாகும்! ஒரே நேரத்தில் 1000 சரக்கு (டாஸ்மாக் அல்ல) விமானங்கள், 2000 பயணிகள் விமானங்களை இங்கு நிறுத்தலாம். உலகில் முதல் முறையாக இங்கு தான்..Four way டிராக் ரன் வே அமைக்கப்படுகிறது! நான்கு விமானங்கள் ஒரே சமயத்தில் ஏறவும் இறங்கவும் முடியும்! இது போல Four way டிராக் ரன்வேக்கள் மொத்த நான்கு (16டிராக்) அமைக்கப்படவுள்ளது.

இது நம் நான்கு வேதங்களை குறிப்பதாகும். இந்த விமான நிலைய ஓடு பாதைகளை ஏரியல் வியூவில் இருந்து பார்த்தால் இராமர் வனவாசம் சென்ற வழித்தடம் போலவும், விமான நிலைய கட்டிடங்களை பார்த்தால் மதுராபுரியில் கிருஷ்ணர் வாழ்ந்த இடம் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது!

இந்த விமான நிலையத்தின் உள்ளே 5 இரயில்வே ஸ்டேஷன்களும் (பஞ்ச பாண்டவர்கள்) 10 பஸ் ஸ்டாண்டுகளும் (தசாவதாரம்) அமைய உள்ளன. மக்கள் வசதிக்காக பிக்சர் இன் பிக்சர் போல இந்த ஏர்போர்ட்டிற்குள் கூடுதலாக ஒரு விமான நிலையமும் அமைக்கப்படவுள்ளது. மொத்தம் 7 டெர்மினல்கள் (சப்த ரிஷிகள்) அமைக்கப்படவுள்ளன. இதில் 3 சர்வதேச டெர்மினல்கள் 3 டொமஸ்டிக் டெர்மினல்கள் மற்றது தனியார் மற்றும் இராணுவத்திற்காக என திட்டமிட்டு கட்டப்பட்டு வருகிறது! ஒரே நேரத்தில் 10ஆயிரம் பேர் உட்கார்ந்து படிக்க ஶ்ரீவால்மீகி எனும் மிகப் பெரிய லைப்ரரியும், 5000 பேர் அமர்ந்து இணையத்தை உபயோகிக்கும் டிஜிட்டல் பாரத் மஹால் என்னும் இடமும் கட்டப்பட்டு வருகிறது.

பணம் செலுத்தினால் கோயூரின், கோடங் டெலிவரி செய்யும் 50 ஆயிரம் கோ வெண்டிங் மிஷின்கள் ஏர்போர்ட் முழுவதும் அமைக்கப்படுகின்றன. உருத்திராட்சம், காவி உடைகள், விபூதி, குங்குமம், சந்தனம், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற மங்கலப்பொருட்களை விற்க 400 டூட்டி ஃப்ரீ....கடைகள் அமைக்கப்படவுள்ளன. விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் விமானங்களின் ஓடு பாதை மஞ்சள் நிறத்திலும் (இராமர்) வந்திறங்கும் விமானங்களின் ஓடு பாதை நீல நிறத்திலும் (கிருஷ்ணர்) அமைவது இதன் தனிச்சிறப்பாகும். கார்கோ விமான நிலையத்திற்கு ஶ்ரீ வாமனா இண்டர்னேஷனல் கார்கோ என்றும் அயோத்திக்கும் மதுராவுக்கும் இடையே என்பதால் இதற்கு ஶ்ரீராமகிருஷ்ணா இண்டர்னேஷனல் ஏர்போர்ட் என்றும் பிற விமான நிலையங்களுக்கு கோட்சே, வீரசவர்க்கார்..சர்தார்ஜி, வீரஹனுமன், அர்ஜுனன் ஆகிய பெயர்களை பரிசீலித்து வருகிறார்கள்.

பண்டிட் சிரோன்மணி ராம்கோவிந்ததாஸ் என்னும் வேத, விஞ்சான, சாஸ்த்திர, சம்பிரதாய அறிஞரின் தலைமையில் 345 ரிஷிகள் இந்த திட்டங்களை வகுத்து ஆலோசனையும் அளித்து வருகிறார்கள். இதை அடுத்த ஆண்டு ஜூலையில் நமது மோடிஜி நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டால் ஆகஸ்ட்டில் இந்தியா டாப்புக்கு வந்து விடும் என இந்த கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த விமானநிலையம் மட்டும் திறந்து விட்டால் உலகப் பொருளாதாரம் அனைத்தும் இந்தியாவில் குவிந்து ஒரு மணிநேரத்தில் 50 டிரில்லியன் டாலர் பி.எம் கேரில் வந்து சேர்ந்து விடும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார். ஜோ பைடனும் புடினும் இனி அமெரிக்காவும் ரஷ்யாவும் சரிந்து விடும் என புலம்புகிறார்கள். சீனா சற்று பதற்றத்தில் தான் இருக்கிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் படுத்து விட்டது. இந்த ஏர்போர்ட் பிரதமர் மோடியின் கனவு ஏர்போர்ட் ஆகும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!