உலக சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பது எப்படி?

உலக சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பது எப்படி?
X

உலகில் தனித்த அடையாளத்துடன் இந்திய வளர்ந்து வருகிறது.

உலகத்தில் நடக்கும் நல்லவை, கெட்டவை எல்லாம் இந்தியாவிற்கு மட்டும் எப்படி சாதகமாகவே இருக்கிறது?

அமெரிக்காவில் நடந்த உலகளாவிய நிர்வாக சூழல், அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் இருந்து வெளிவந்த ஒரு சுவாரஸ்யமான ரிப்போர்ட் பற்றி பார்க்கலாம்.

உக்ரைன் போர், இஸ்ரேல் தாக்குதல், ரஷ்ய பிரச்சினை, சீனாவின் வீழ்ச்சி, ஹௌத்தி தாக்குதல், அதன் அண்டை நாடுகளின் பொருளாதார சரிவு, காஷ்மீர் பிரச்சினை, வீழ்ந்த பாகிஸ்தான் என்று எதை எடுத்தாலும் அது உலகில் இந்தியாவிற்கு மட்டும் எப்படி சாதகமாக இருக்கிறது என்று விரிவாக ஆய்வு செய்துள்ளனர். இது குறித்த ரிப்போர்ட் ஒன்றும் அமெரிக்காவின் எதிர்கால திட்டமிடல் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 80% இந்தியர்களும், 72% உலக மக்களும் இந்திய அரசு மிக சிறப்பாக செயல்படுவதாக கூறி, அதுபோல ஏன் உங்களால் செய்ய முடியவில்லை என்று கோபமாக, தங்கள் அரசு மீது விமர்சனம் செய்து வருகின்றனர் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.


இந்தியா உலகின் பலமான நாடாக உருவாகி வருவதாக 69% இந்தியர்கள் இந்திய அரசை நம்புகிறார்கள். அதை விட பாகிஸ்தானியர்கள் அதிகம் நம்புகிறார்கள் என்பது ஆச்சரியமே. அது மட்டுமல்ல, இந்தியர்களின் பாஸ்போர்ட்டுக்கு உலகெங்கும் கிடைக்கும் மரியாதை பெரியளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அமெரிக்க, ஐரோப்பியர்கள் போன்று மேலை நாட்டினருக்காக, இந்தியர்களை காத்திருக்க வைத்த காலம் போய், சமமாக நடத்துகிறார்கள். பத்து ஆண்டுகளுக்கு முன் பல நாடுகளில் இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பெரியதாக கண்டுக்காமல் இருந்தனர்.. இன்று அது முற்றிலும் மாறி மரியாதை அதில் இருக்கிறது என்று இந்தியர்கள் சந்தோஷப்படுகிறார்கள்.

இவற்றையெலாம் தாண்டி, உங்கள் நாடு எப்படி இவ்வளவு வேகமாக முன்னேறியது என்று மற்ற நாட்டினர் கேட்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு எல்லாம் காரணம் பிரதமர் மோடி தான் என்பதையும் அறிந்துள்ளனர் என இந்தியர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

வெளிநாட்டவர்கள் பலர் மோடியை பற்றி நன்கு அறிந்து, தெரிந்து வைத்திருக்கிறார்கள், கேட்கிறார்கள், யோகாவை பற்றி விவாதிக்கிறார்கள். இந்த சூழலில், இந்தியாவில் எடுக்கப்பட்ட சர்வேயில் தமிழகத்தில் மட்டுமே 52% மோடியை பாரட்டுகிறார்கள். 17% பேர் பாராட்டாவிட்டாலும் எதிர்க்கவில்லை. 31% பேர் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒரிஸ்ஸாவில் மிக அதிகளவில் மக்கள் மோடியை மதிக்கிறார்கள்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா