மத்திய அரசு மாநிலங்களுக்கு எப்படி நிதி ஒதுக்குகிறது?

மத்திய அரசு மாநிலங்களுக்கு  எப்படி நிதி ஒதுக்குகிறது?
X

நிதி ஒதுக்கீடு மாதிரி படம் 

அதிகரித்து வரும் மாநில அரசுகளின் செலவுகளால் மாநில அரசின் நிதிநிலை கடுமையாக தடுமாறும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நவ 22, 1951 Finance Commission of India அமைக்கப்பட்டது. அது வரி வருவாய், வருமான பகிர்வு என்று பல விஷயங்களை கீழ்கண்ட சில காரணிகளை வைத்து, அதன் அடிப்படையில் நிதியை மாநிலங்களுக்குள் பங்கிடுகிறார்கள். எவ்வளவு வருமானம் வந்தாலும் இந்த ஃபார்முலாவைத் தான் மத்திய அரசு பயன்படுத்த வேண்டும் என்பதும் விதி.

நிதி பங்கீடு ஃபார்முலா காரணிகள்!

1) மாநிலத்தின் பரப்பளவு

2) அந்த மாநிலத்தின் மக்கள் தொகை

3) Per capita income and income distance

4) வரி மற்றும் பற்றாக்குறை

5) Demographic performance

6) Forest and Ecology

இதில் மக்கள் தொகை என்றளவில் முதலில் 15% Weightage கொடுக்கப்பட்டது. ஆனால் தென்னிந்திய மாநிலங்கள் மக்கள் தொகை குறைந்த போது, வட இந்திய மாநிலத்தின் மக்கள் தொகை உயர்ந்ததால், திமுக அங்கமாக இருந்த UPA ஆட்சியில் அது 23% ஆக உயர்த்தப்பட்டது. அப்போது அரசில் அங்கமாக இருந்த போது அமைதியாக இருந்த திமுக, 20 வருடம் கழித்து இப்போது அது தவறு என்கிறது.

அதுவும் எப்போது 2014 ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்தபின் அது 17.5% சதவீதமாகவும், பின்பு 15% ஆகவும் குறைக்கப்பட்ட பின்பு. ஆனால் அதை வைத்து மோடி அரசு உத்திரபிரதேசத்திற்கு அதிக நிதி கொடுப்பதாக புகார் எழுப்புகிறது.

உங்கள் வீட்டில் 2 குழந்தைகளில், பெரியவன் படித்து சொந்த வருமானம் வந்த பின் அவனுக்கு பெற்றோர்களின் உதவி குறையும். அப்போது வருமானம் இல்லாத இரண்டாவது குழந்தைக்கு பெற்றோர் அதிகம் உதவி செய்வது தவறா?

அதுபோல ஒரு மாநிலத்தின் தனி நபர் வருமானம் உயர்கிறது என்றால், மாநிலம் வளர்வதாக அர்த்தம். அவர்கள் சொந்தமாக நிதி நிலையை சமாளிக்கும் நிலையை நோக்கி செல்கிறார்கள் எனபதே அர்த்தம்.

அடுத்த வந்த GST ஐ மத்திய அரசு முடிவு செய்யவில்லை. எல்லா மாநில அரசுகள் கூடி எடுக்கும் முடிவு. GST யில் 50% மாநில அரசுக்கு SGST வரியாக நேரடியாக வந்து விடும். அடுத்து IGSTஎன்பது நம் மாநிலத்தின் உற்பத்தியான ஒரு கார் , ஒரிஸ்ஸாவில் விற்றால், அதை இரு மாநிலமும் பங்கு போட்டுக்கொள்ளும். மூன்றாவது CGST என்பது மத்திய அரசுக்கு போகும்.

அதில் கிட்டத்தட்ட 41% மீண்டும் மாநிலத்திற்கு ஏர்போர்ட், ரோடு, துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை, ஊரக நெடுஞ்சாலை, கிராமப்புற நெடுஞ்சாலை, தேசிய வங்கிகள், ரேஷனில் இலவசமாகவும், மானிய விலையிலும் கொடுக்கும் உணவுகள், மருத்துவமனை, மருந்து, தடுப்பூசி, விளையாட்டு, என்று பலப்பல வழிகளில் திரும்ப வந்து விடும். அதற்கு காசு எங்கே? பீதாம்பரம் போல நோட்டை அச்சடிக்கவா முடியும்?

அதுமட்டுமல்ல மிக முக்கியமான பாதுகாப்பு, ஆராய்ச்சி, ரயில் போகுவரத்து, அண்டை நாடுகள் உறவு, வெளியுறவுத்துறை, ஐ நா பாதுகாப்பு, உலக வங்கிகள் போன்ற கூட்டாட்சி நிதி ஒதுக்கீடு, நட்பு நாடுகளின் பாதுகாப்பு என்று மத்திய அரசின் செலவுகளை அடுக்கிக்கொண்டடே போகலாம்.

அதுமட்டுமல்ல 150 நாள் வேலை வாய்ப்பு, விவசாயிகளுக்கு ரூ.6000, நதிகள் இணைப்பு, கழிவறை முதல் வீடுகள் வரை கட்டிகொடுப்பது, பஞ்சாயத்து நிதி ஒதுக்கீடு என்று எல்லாம் செய்து மீதம் இருக்கிற காசில் முதலீடும், ரிசர்வ் கரன்ஸி முதல் மாநிலங்களுக்கான கூடுதல் ஒதுக்கீடு வரை செய்கிறது. எப்படி?

ஒரு ரூபாய் முதலீடு செய்தால் நான்கு வருடத்தில் ரூ.3.27 வருமானமாக வருகிறது. அதனால் மத்திய அரசு நல்ல வகையான முதலீடு செய்கிறது. ஆனால் சில மாநில அரசுகள் ரூ.1 முதலீட்டுக்கு 40 பைசா கமிஷனாக.கூட்டி 1.40 ரூபாய்க்கு செலவு செய்கிறது. அதுவும் மத்திய அரசு போல, வருமானத்திற்கு வழிகோலும் Capital Expense செய்வதில்லை. இலவசம் என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்கிறது. அதில் கமிஷனும் அடிக்கிறது.

அதற்கு மேல் வாங்கிய கடன் 8.6 லட்சம் கோடிக்கு தமிழக அரசு கட்டும் வட்டி என்பது GDP யில் 25% என்றால் நாம் எப்படி முதலீடு செய்ய முடியும், வருமானத்தை பெருக்குவது?

ஒரு அதிகாரிக்கு அரசாங்க குவார்டர்ஸ் கொடுத்தார்கள். அதில் பத்து மாதங்கள்.கூட ஆகவில்லை, நிலைகள் உடைந்து வெளியே வந்து விட்டது. அப்படியெனில் அந்த மொத்த முதலீட்டிற்கு மேலும் மேலும் செலவுகளை செய்தே ஆக வேண்டி வந்தால் எப்படி ஒரு அரசாங்கம் அதனால் பயனடையும்?

பதிலாக அந்த வீடு குறைவான செலவில், தரத்தோடு கட்டப்பட்டால், அவருக்கு கொடுக்கிற HRA சேமிப்பின் மூலம் அரசுக்கு செலவினங்கள் குறைவதால் ஆதாயம் உண்டு.

மோடி அரசோ, சுற்று சூழலுக்காக காடுகளை வளர்க்க நிதி ஒதுக்கீடு அதிகரிக்கிறது. ஆனால் இங்கே இருக்கும் அரசு செய்வதென்ன? மாநில அரசுகளின் தேவையற்ற செலவுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படி பணத்தை வீணாக வாரியிறைத்து விட்டு, மாநில அரசுகள் ஏன் மத்திய அரசை குறைசொல்ல வேண்டும்?

Tags

Next Story
Weight Loss Tips In Tamil