வீடு தேடி வரும் மருத்துவ சேவை..!
எல்லோருடைய வீட்லும் வயசான தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா இருப்பாங்க. பெரும்பாலும் அவங்க இரத்த கொதிப்பு, நீரழிவு நோய் மாத்திரை சாப்பிட கூடியவர்களா இருப்பாங்க. ஊரடங்கு காலத்தில், உடனே நினைத்த நேரம் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு போக முடியாம இருக்கலாம். இந்த ஊரடங்கு காலத்துல மருத்துவனைக்கு போனால் நோய் தொற்று ஏற்படும் என்ற பயம் பல பேருக்கு இருக்கும்.
ஒரு தலைவலி, உடம்புவலினு எது இருந்தாலும் பக்கத்துல இருக்க மருத்துவமனைக்கு போக கூடிய ஆட்கள் கூட நிறைய இடங்களில் வீட்டிலேயே முடங்கி இருப்பீர்கள். இனிமே அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்காக மத்திய அரசு இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஆன்லைனில் இலவசமாக மருத்துவரின் பரிந்துரையை பெற முடியும். கட்டணம் இல்லாத மருத்துவ சேவையாக 'இ-சஞ்சீவினி ஓபிடி' என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன் அறிமுகமான இந்த திட்டத்தின் மூலம், பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்லாமலேயே மருத்துவ ஆலோசனைகளைப் பெற முடியும். கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர், நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு சேவையாற்றுவதற்கு தமிழகத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உள்ளனர். இதுவரை இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தால் தமிழகத்தில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர். இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம்தான் இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தை சிறப்பாக பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த இ-சஞ்சீவினி ஓபிடி திட்டத்தை பயன் படுத்தியதில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்ததுள்ளது.
பொதுமக்கள் இச் சேவையை பயன்படுத்த www.esanjeevaniopd.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது esanjeevaniopd என்ற ஆன்ட்ராய்டு செயலி மூலமாகவோ தங்களுடைய செல்போன் எண்ணைபதிவு செய்து தங்கள் செல்போனுக்கு வரும் கடவு எண்ணை (OTP) பயன்படுத்தி மருத்துவரை சந்திக்க டோக்கன் பெறலாம். இதையடுத்து, மருத்துவரைசந்திப்பதற்கான பிரிவில்நுழைந்து, காத்திருப்பு அறைதிரையில் தற்போது அழைக்கவும்(Call Now) என்று வரும்போதுஅந்த உள்ளீட்டை அழுத்தினால்மருத்துவருடன் தொடர்பு கொண்டு காணொலி மூலம் ஆலோசனை பெற முடியும்.
ஆலோசனை முடிந்த பின்னர்மருத்துவரின் கையெழுத்துடன் பரிந்துரை சீட்டை பதிவிறக்கம்செய்யலாம். அந்த சீட்டை வைத்துமருந்துக் கடைகளில் மாத்திரை,மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே மருத்துவரை பார்த்த மருத்துவ சீட்டுகள் மற்றும் பரிசோதனை முடிவுகள் இருந்தால் ஆலோசனைக்கு முன்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் ஏழு நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சேவை வழங்கப்படுகிறது. எச்ஐவி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு என தனியாக மருத்துவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரைகாலை 8 மணி முதல் மதியம்1 மணி வரை ஆலோசனைகளை வழங்குகிறார்கள். இதை முழுமையான கட்டணமில்லா சேவையாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu