முக்தார் அன்சாரி வீழ்ந்தது எப்படி? ஒடுக்கப்பட்ட சாம்ராஜ்யம்..!

முக்தார் அன்சாரி வீழ்ந்தது எப்படி? ஒடுக்கப்பட்ட சாம்ராஜ்யம்..!
X

உ.பி.,யை சேர்ந்த தாதா முக்தார் அன்சாரி.

யோகி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் கிழக்கு உத்தரபிரதேசம் போக வேண்டும் என்றார்.

உத்தரபிரதேசத்தின் கிழக்குப்பகுதிக்கு போகவேண்டும் என்று ஆதித்யநாத் யோகி கூறினார். அதுவும் வேலைப்பளு அதிகம் இருந்ததால், அந்த பயணத்தை இரவில் தொடர திட்டமிடுகிறார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பில்லை என்பதால் இரவில் செல்ல முடியாது என்கிறார்கள்.

காரணம் சில ஆபத்தான வழியாக பயணம் செல்ல வேண்டும். அது அவரின் உயிருக்கு ஆபத்தானது என்று சொல்கிறார்கள். ஒரு முதல்வரே போக முடியவில்லை என்றால், மக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ முடியும் என்று முதல்வர் யோகி கேட்கிறார்?

அதற்கு யார் காரணம் என்ற போது, பலர் இருந்தாலும், அங்கே முக்தார் அன்சாரி ஒரு தனிநபர் இருக்கிறார். அவர் தனி அரசாங்கமே நடத்துகிறார் என்பதை தயக்கத்தோடு சொல்கிறார்கள். ஏனெனில் அப்படி அவரைப்பற்றி சொன்னால், அவர் உயிரோடு இருக்க முடியுமா என்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு.

அவர் ஒரு கல்யாணத்திற்கு வாழ்த்த வந்தால்கூட, அவரை சுற்றி ஒரு ஐம்பது ரௌடிகள் வருவார்கள். அவர்கள் கையில் போலீஸில் கூட இல்லாத Light Machine Gun உடன் அவர்கள் வருவார்கள். அவரை எதிர் கேள்வி கேட்டால் குருவியை சுடுவது போல சுட்டுக் கொல்வார்கள்.

அவர் மீது 60 க்கும் மேற்பட்ட வழக்குகள். அதில் ஒன்று பாஜக MLA ஒருவரை கொன்ற வழக்கு. அவர் பல முறை MLA ஆக சமாஜ்வாடியில் இருந்தவர். அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் அவர்கள் வெல்லப்படுவார்கள், பின்பு கொல்லப்படுவார்கள்.

அவர் தம்பிக்கு எதிராக போட்டியிட்டு வென்றதால், பாஜக MLA ஒருவரையும், அவருடன் சென்ற 7 பேரையும் பட்டப்பகலில் சுட்டுக் கொன்றார். அந்த வழக்குகள் எல்லாம் தூங்கிக்கொண்டு இருந்தது. அதைத்தட்டிகேட்க வேண்டிய நீதிமன்றம், உயிருக்கு பயந்து உறங்கிக்கொண்டு இருந்தது. அவரை கைது செய்யும் துணிச்சல் எல்லாம் அகிலேஷ் யாதவுக்கு என்ன, அவங்க அப்பனுக்கே இருந்ததில்லை.

அவருக்கு எதிராக வழக்கு பதிவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். அபடியே வந்தாலும், போலீஸ் வழக்கை எடுத்துக் கொள்ளாது. அதையும் மீறி செய்தால், வழக்கு பதிவு செய்த போலிஸும், வழக்கை பதிவு செய்தவனும் பரலோகம் சென்று விடுவார்கள்.

அப்போது சைலேந்திர பாபு என்ற அதிகாரி, அவர் மீது பாகிஸ்தானில் இருந்து தருவிக்கப்பட்ட LMG க்கள் பல அவரிடம் இருந்தது என்பதற்காக, ஆளும் கட்சியினரையும், மற்ற அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி POTA வழக்கில் பதிவு செய்தார்.

ஆனால் அன்று இரவே, போலீஸ் அதிகாரிகளால் அவர் மீதே வழக்கு பதிவு செய்யப்பட்டு, நடு ராத்திரியில் அன்சாரி ஆட்களால் தரதரவென இழுத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்துடன் வெளி மாநிலத்தின் குடியேறினார்.

அவருக்கு கீழ் 12+ MLA க்கள் இருந்தார்கள். அவருக்கு என்று ஒரு குட்டி ராணுவமே பாதுகாப்பாக இருந்தது. அப்படிப்பட்டவரகவ் ராஜ்யத்தை தாண்டித்தான் போகவேண்டும், அது ஆபத்தானது என்று தடுத்தார்கள் போலீஸ் அதிகாரிகள்.

அடுத்த நாள் சட்டசபை கூட்டத்தில் சட்டம் ஒழுங்கின் மிக மோசமான நிலையை விளக்கி பேசினார் யோகி. கோபத்தின் உச்சிக்கு சென்றவர், ரவுடிகள் ஒன்று ஜெயிலுக்குள் இருக்க வேண்டும் அல்லது மேலுலகிற்கு அனுப்ப வேண்டும் என்று கடுமையான உத்தரவு பிறப்பித்தார். அந்த பேச்சு, உபியின் அரசியல் சரித்திரத்தின் சுதந்திர பிரகடனம் என்றே சொல்லலாம்.

அவருக்கு வெண்சாமரம் வீசிய போலீஸில் இருந்த பல அதிகாரிகள் ஓரம் கட்டப்பட்டனர். வேட்டை ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட ரவுடிகள் என்கவுண்டரில் மேலுலகிற்கு பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டார்கள். மீதம் இருப்பவர்கள் உயிருக்கு பயந்து தாங்களாக முன்வந்து போலீஸில் சரண்டர் ஆனார்கள். ரவுடிகளின் சொத்துக்களும், தவறு செய்கிறவர்களின் வீடுகளும் புல்டோஸரால் இடித்து தரைமட்டமாகியது.

அப்படி உறங்கிக்கொண்டு இருந்த வழக்குகள் உயிர்பெற்று, போலீசால் கைது செய்யப்பட்டு, இருந்த பல வழக்கில் இவன் தண்டனை பெற்றான். அதன் படி MLA கொல்லப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகாலம் (மட்டும் ? ஆம் அவன் மீதுள்ள பயம்!) சிறை தண்டனை வழங்கப்பட்டு ஜெயிலில் இருந்தவன், இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் இறந்து போனான்.

இவன் ஸ்லோ பாய்ஸனிங்கில் கொல்லப்பட்டதாக அவன் குடும்பம் அழ, அதை அரசியல் ஆக்க நினைத்து சமாஜ்வாடி. காங்கிரஸ் போன்ற கட்சிகள அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தை அறிவித்தது. அதற்கு போதுமான ஆதரவு இல்லை.

இந்துக்கள் தான் ஆதரவு தரவில்லை என்று நீங்கள் நினைத்தால் தவறு. இஸ்லாமியர்கள் பலரும் சமாஜ்வாதி உட்பட எதிர்க்கட்சிகளை எதிர்க்க, போராட்டம் பிசுபிசுத்தது. அது மட்டுமல்ல, அவன் இறந்த செய்திகேட்டு, அவன் ஊரில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். பல ஆண்டுகள் மாநிலத்தை விட்டு வெளியேறிய அந்த போலீஸ் அதிகாரி சைலேந்திர பாபு மீண்டும் உத்தபிரதேசம் திரும்பியுள்ளார்.

இன்று உபியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உயர்ந்த நிலையில் உள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!