அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் யார் தெரியுமா..?

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர் யார் தெரியுமா..?
X

Highest Victory Margin-அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜவின் ஷங்கர் லால்வானி (கோப்பு படம்)

நடந்துமுடிந்த தேர்தலில் அதிக வாக்கு எண்ணைக்கையில் வெற்றிபெற்ற வேட்பாளர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் இருந்து தேர்வாகியுள்ளார்.

Highest Victory Margin,Leads Leaders, Election Result 2024

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், எதிர்கட்சிக் கூட்டணியான இந்தியா கூட்டணியை விட பாஜக தலைமையிலான என்.டி.ஏ முன்னணியில் உள்ளது. பொதுவாக எல்லா தேர்தல்களிலும் பாஜகவின் ஆதிக்கம் உத்தரபிரதேசத்தில் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியின் ஆதிக்கம்,உத்தரபிரதேசத்தில் கடுமையான சவாலை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.

Highest Victory Margin,

பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவார் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டிருந்தாலும் அந்த கணிப்புகளின்படி பாஜ அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்வதற்கான சூழ்நிலை இல்லை.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜகவின் பிரசாரம் சூறாவளியாக நடைபெற்றது. கட்சியின் மிகப்பெரிய நட்சத்திரப் பிரசாரகரான பிரதமர் மோடி, பேரணிகள் மற்றும் ரோட் ஷோ உட்பட 200க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார். இந்திய தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டுப் பேரணிகளும் நடந்தன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது. 1951-52ல் நடந்த இந்தியாவின் முதல் தேர்தலுக்குப் பிறகு இந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் இரண்டாவது முறையாக மிக நீளமானது. எந்த கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.

அதிக வித்தியாச வெற்றி

இந்தூரின் ஷங்கர் லால்வானி வெற்றி வித்தியாச சாதனையை முறியடித்த தலைவர்களில் முன்னணியில் உள்ளார்

Highest Victory Margin,

பாஜகவைச் சேர்ந்த 4 பேர் உட்பட குறைந்தது ஐந்து அரசியல் தலைவர்கள் மக்களவைத் தேர்தலில் அதிக வெற்றி வித்தியாசத்தில் முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளனர். இந்தூரின் தற்போதைய எம்பி ஷங்கர் லால்வானி 11.72 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தில் உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், குஜராத் பாஜக தலைவர் சிஆர் பாட்டீல் ஆகியோர் தலா 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். அசாமின் துப்ரி தொகுதியில் காங்கிரஸின் ரகிபுல் உசேன் 7.36 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

Highest Victory Margin,

பெரும்பான்மைக்குத் தள்ளாட்டம்

கடந்த இரண்டு பொதுத் தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையைத் தாண்டிய பாஜக, இம்முறை தள்ளாடுவதாகத் தோன்றுகிறது. மத்தியில் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மையான 272-ஐப் பெறுவதற்கு பாஜவுக்கு அதன் கூட்டணிக் கட்சிகளின் உதவி கொஞ்சம் தேவைப்படலாம்.

தமிழகத்தில் மொத்தமாக அள்ளிய திமுக

தமிழகத்தில் ஆளும் திமுக மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பில் உள்ளது. மாலை 4:30 மணி நிலவரப்படி, 39 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை பெற உள்ளது. காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள், விசிக, ம.தி.மு.க., மற்றும் பிற கட்சிகளுடன் அதே வலிமையான கூட்டணி 2019ல் அமைக்கப்பட்டு 38 இடங்களை வென்றது. புதுச்சேரியில் காங்கிரஸ் தனி இடத்தைப் பெற்றதன் மூலம், திமுக கூட்டணி 40க்கு 40 என்ற விகிதத்தை தக்கவைக்கும் என தெரிகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!