UPI மூலம் தவறாக பணம் அனுப்பிவீட்டீர்களா..?
பைல் படம்
Paypal Meaning in Tamil-ஜிபே,பேடிஎம் போன்ற மொபைல் ஆப் மூலம் பணம் அனுப்பும் போது, தவறுதலாக எண்ணையோ பெயரையோ உள்ளிடும் போது, உரியவர்களுக்கு பதிலாக வேற நபர்களின் கணக்கில் நீங்கள் அனுப்பும் பணம் போய் சேர்ந்து விடும் அல்லது உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டதாக காட்டும். அப்படி நடக்கும் போது, அந்த பணத்தை திரும்ப பெறுவது பெரும் சிரமமான காரியமாக உள்ளது. இந்த விஷயத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்படி, பணத்தை தவறாக அனுப்பிவிட்டால் முதலில் நீங்கள் பயன்படுத்தும் செயலியின் நிறுவனத்தில் புகார் அளிக்க வேண்டும்.
நிறுவனம் உரிய தீர்வு வழங்கவில்லை என்றால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ரிசர்வ் வங்கியின் ஒம்புட்ஸ்மேன் சேவையை அணுகலாம்.
ஆர்பிஐயின் விதிமுறைகளின் படி, ஒம்புட்ஸ்மேன் பிரிவு 8-ன் கீழ், இந்த புகாரை அளிக்கலாம். உங்கள் நிதி செயலி நிறுவனம் நடவடிக்கை எடுக்காத நிலையில், ஒம்புட்ஸ்மேன் குறைத்தீர்ப்பு மையம் உங்களின் பிரச்னையை ஆராய்ந்து, அதற்கான தீர்வை வழங்கும். வங்கி, இன்ஷுரன்ஸ் போன்ற பிரச்னைகளுக்கும் இந்த ஒம்புட்ஸ்மேன் சேவை உள்ளது. வாடிக்கையாளர்களின் பிரச்னையை தீர்ப்பதற்கான ஒம்புட்ஸ்மேன் குறை தீர்ப்பு முகாமில் 21 பேர் உள்ளனர்.
சென்னையில் உள்ளவர்கள் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா போர்ட் கிளாசிஸ், சென்னை 600 001 (Bank of India Fort Glacis, chennai 600 001) என்ற முகவரியில் சென்ற புகார் அளிக்கலாம் அல்லது 044 25395964 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் பிரச்னைக்கு தீர்வு காணலாம்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu