தங்க நகைகளுக்கு இன்னியிலேருந்து 'ஹால்மார்க்' முத்திரை முக்கியம்ங்கோ

தங்க நகைகளுக்கு இன்னியிலேருந்து ஹால்மார்க் முத்திரை முக்கியம்ங்கோ
X

தங்க நகைகள் 

தங்க நகைகளுக்கு இன்று முதல் ஹால்மார்க் முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தங்க நகைகாளி தரத்தை உறுதிப்படுத்தும் குறி 'ஹால் மார்க்' முத்திரை. இந்த ஹால்மார்க் முத்திரை இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதன் தொடக்கமாக முதலில் 256 மாவட்டங்களில் இன்று (ஜூன் 16) முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 'ஹால் மார்க்' முத்திரையுடன் மட்டுமே தங்கநகைகளை விற்பனை செய்யவேண்டும் என்று 2019ம் ஆண்டில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி 2021ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் ஹால் மார்க் முத்திரையுடன் மட்டுமே தங்க நகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால், அந்த காலகட்டத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமாகியிருந்ததால் அது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தங்க நகை விற்பனையார்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி நேற்று நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் முதற்கட்டமாக 256 மாவட்டங்களில் 'ஹால் மார்க்' முத்திரையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது.

அந்த முடிவின்படி, உத்தரவு அமலுக்கு வந்துள்ள 256 மாவட்டங்களில் இன்று முதல் 'ஹால்மார்க்' முத்திரை கொண்ட 14, 18, 22 காரட் தங்க நகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!