புற்றுநோய் மருந்துக்கு ஜிஎஸ்டி விலக்கு ?
பைல் படம்
ஜி.எஸ்.டி., வரிவருவாய் மாதந்தோறும் அதிகரித்துக் கொண்டே வந்தாலும், அது குறித்த சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றன. மருந்துகள், உணவுப்பொருட்கள், ஓட்டலில் சாப்பிடும் உணவுகளுக்கு கூட ஜி.எஸ்.டி.,வரி வசூலிக்கப்படுவது பலத்த விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக அரிசிக்கு கூட ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், தனிநபரால் இறக்குமதி செய்யப்படும் ‘டைனடக்சிமேப்’ (கா்சிபா) புற்றுநோய் மருந்துக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-ஆவது கூட்டம் வரும் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. முக்கியமாக, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் விநியோகிக்கப்படும் உணவுகளுக்கான சரக்கு-சேவை வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பது தொடா்பாக இறுதி முடிவெடுக்கப்படவுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘டைனடக்சிமேப்’ மருந்து தனிநபரால் இறக்குமதி செய்யப்படும்போது, அதற்கு ஜிஎஸ்டி விலக்களிப்பது, மேலும் சில மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்களிப்பது உள்ளிட்டவை தொடா்பாக ஜிஎஸ்டி கவுன்சில் விவாதிக்கவுள்ளது.
புற்றுநோய் மட்டுமின்றி, அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சர்க்கரை நோய், இருதய நோய், சிறுநீரக நோய், ரத்தக்கொதிப்பு நோய் போன்ற பலராலும் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் மருந்து எடுக்கும் நிலையில் உள்ள பல்வேறு மருந்துகளுக்கும் ஜி.எஸ்.டி., வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu