அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி ரூ.1,72,003 கோடி வசூல்
இந்திய பொருளாதார வளர்ச்சி பல்வேறு ஆச்சர்யங்களை ஏற்படுத்தும் என கடந்த வாரம் ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது. அதன் படி நாட்டின் இரண்டாவது காலாண்டிற்கான வளர்ச்சி மிக, மிக அபரிமிதமாக உள்ளது.
இதற்கான அளவீடு ஜி.எஸ்.டி. வரிவசூல் மூலம் தெரியவந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஜி.எஸ்.டி., வரிவசூல் அபரிமிதமாக வளர்ந்து வருகிறது.
அக்டோபர் மாத ஜி.எஸ்.டி., வரிவசூல் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 1,72,003 கோடி ரூபாய் ஆக உள்ளது. இதில், சிஜிஎஸ்டி மூலம் ரூ.30,062 கோடியும், எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.38,171 கோடியும், ஐஜிஎஸ்டி மூலம் ரூ.91,315 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.42,127 கோடியும் சேர்த்து)செஸ் வரி மூலம் ரூ.12,456 கோடியும் (பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.1,294 கோடியும் சேர்த்து) அடங்கும்.
2023 அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 அக்டோபர் மாதம் வசூல் ஆன தொகையை விட 13 சதவீதம் அதிகம் ஆகும். 2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டுவது இது 5வது முறையாகும்.
நடப்பு நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி வசூல் ரூ.1.66 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் சராசரியை விட 11 சதவீதம் அதிகமாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu