பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி: நாளை முதல் இலவசம்
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. பல்வேறு உருமாற்றங்கள் அடைந்து உலக நாடுகளை மிரட்டி வருகிறது.
கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் பேராயுதமாக தடுப்பூசி வழங்கி வருகிறது. இத்தகைய தடுப்பூசி இந்தியாவில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியின் காரணமாக இந்தியாவில் முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையில் இறப்பு விகிதம் குறைவாகவே இருந்தது.
முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசிகளை மக்கள் தனியார் தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு முன்னதாக அறிவித்திருந்தது. பணம் கொடுத்து செலுத்த வேண்டும் என்பதால், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், மக்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் இலவசமாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி நாளை முதல் 18 முதல் 59 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
ஜூலை 15ம் தேதி முதல் செப்டம்பர் 28 வரை மொத்தம் 75 நாட்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu