பெட்ரோலிய ஏற்றுமதியில் 4ம் இடம் பிடித்த இந்தியா..!

பெட்ரோலிய ஏற்றுமதியில் 4ம் இடம் பிடித்த இந்தியா..!
X

பெட்ரோலியம் ஏற்றுமதி -கோப்பு படம் 

சவூதி, ஈரான், ரஷ்யா நாடுகளின் வரிசையில் இந்தியாவும் பெட்ரோலிய ஏற்றுமதியில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அரபு நாடுகளில் பெட்ரோலிய வளம் இயற்கை தந்த கொடை. இந்தியாவில் மிக மிக குறைவு. இந்தியா தனது பெட்ரோலிய தேவைக்கு 85% வெளி நாடுகளையே நம்பி இருக்கிறது.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் ஏற்றுமதி எப்படி சாத்தியம்? சாத்தியமாக்கியுள்ளது நம் பாரதப் பேரரசு... ஒரு சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை வரும் போது அதை தனக்கு சாதகமாக்கி அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு முன்னேறுபவன் புத்திசாலி.

அப்படி எப்போதெல்லாம் வாய்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அதை தனக்கு சாதகமாக்கி கொண்டு மிக சரியாக பன்னாட்டு அரசியல் செய்து வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான பாரத அரசு. ரஷ்ய - உக்ரைன் போரின் தொடக்கத்தில் ரஷ்யாவிடமிருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்க கூடாது என அமெரிக்கா பொருளாதார தடைவிதித்தது.

அமெரிக்காவுடன் கூட்டணியில் இருக்கும் வேறு யூராப்பிய நாடுகளும் வேறு வழியில்லாமல் ஒப்பந்தந்தை மீற முடியாமல் வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணையை வாங்கி வந்தன.

அவர்களின் கச்சா எண்ணெய் தேவையை சவூதி மட்டுமே நிறைவு செய்து வந்தது. ஏனென்றால் இன்னொரு பெரிய பெட்ரோலிய உற்பத்தி நாடான ஈரானிடமும் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாத அளவிற்கு அரசியல் குழப்பம். எனவே சவூதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாயம்.

ஒரு பொருளின் தேவைக்கு ஒரே நாட்டினை மட்டுமே நம்பி இருப்பது மிகப்பெரிய ஆபத்தை சில நேரங்களில் தந்து விடும். என்ன தான் ஐரோப்பிய நாடுகளுக்கு சவூதி தேவையான கச்சா எண்ணெயை வழங்கி வந்தாலும் அதிகப்படியான உற்பத்தி, ப்ராச சிங், ஏற்றுமதி என்று திணறித் தான் போனது. இதனால் ஐராப்பிய நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை எகிறிக் கொண்டே சென்றது.

அமெரிக்காவின் பொருளாதார தடையில் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தன. ஒன்று ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க கூடாது. இன்னொன்று ரஷ்யாவின் கச்சா எண்ணையை இன்னொரு நாடு மூலமாகவும் வாங்க கூடாது. (சரியான திமிர் பிடித்த நாடு அமெரிக்கா)

இது தான் நமக்கான இடம். இந்த விதிதான் இன்று பெட்ரோல், டீசல் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய இடத்தை பெற காரணமாக இருக்கிறது. எந்த கொள்கையை அமெரிக்கா தனக்கு சாதகம் ரஷ்யாவிற்கு பாதகம் என்று நினைத்ததோ, அதுவே அதற்கு வினையாக வந்து நின்றது.

இந்த கொள்கை ரஷ்யாவிற்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அமெரிக்காவின் கணக்கு இடறியது. அதற்கு முக்கிய காரணம் இந்தியா. பெட்ரோல், டீசல் நுகர்வோரில் மிகப்பெரிய நாடு இந்தியா. ஆனால் இந்தியா அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு செவிசாய்க்கவில்லை. அமெரிக்கா மிரட்டியும் பார்த்தது. இந்தியா மசியவில்லை. மாறாக அதிகப்படியான கச்சா எண்ணையை ரஷ்யாவிடமிருந்து வாங்க புதிய ஒப்பந்தங்கள் இட்டு கொண்டு, பேரல் பேரல் களாக கச்சா எண்ணையை வாங்க தொடங்கியது நம் பாரதம்.

பொருளாதார தடையால் ஐரோப்பிய நாடுகள் பெட்ரோல் வாங்க சவூதி பக்கம் சாய, அந்த விற்பனையை ஈடு செய்ய ரஷ்யா மலிவு விலைக்கு இந்தியாவிற்கு கச்சா எண்ணையை வழங்கியது. கச்சா எண்ணையை வாங்கி வாங்கி குவித்து, இருப்பை அதிகரித்து கொண்ட இந்தியா, அதன் பின் ஆட்டத்தை தொடங்கியது.

கச்சா எண்ணையை ரிலையன்ஸ், நயாரா, இந்தியன் ஆயில் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு கச்சா எண்ணையை சுத்திகரித்து பெட்ரோல், டீசலை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

கச்சா எண்ணைக்கு சவூதியை மட்டுமே நம்பி இருந்த ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி வசதியாக இருந்தது. சவூதியை மட்டுமே நம்பி இருப்பது பன்னாட்டு அரசியல் நிலைபாடுகளில் எப்போது வேண்டுமானாலும் சிக்கலை கொண்டு விடும் என்ற அமெரிக்காவின் நினைப்பிற்கு இந்தியாவின் பெட்ரோல் டீசல் வர்த்தகம் வசதியாக இருந்தது.

இதில் பல நன்மைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு. ஒன்று இந்தியாவிடம் வர்த்தக உறவை நம்பி செய்யலாம். அது ஒரு பலம். அடுத்து ரஷ்யா மீதான பொருளாதார தடை விதிகளை மீறியதாகாது. சவூதியிடம் கச்சா எண்ணெய் வாங்கி சுத்திகரிப்பு செய்து பயன்படுத்துவதை விட இந்தியாவிடம் வாங்கும் போது செலவும் குறைவு.

கடைசியாக பெட்ரோல் டீசலுக்கு சவூதியை மட்டுமே நாங்கள் நம்பி இல்லை. எங்களுக்கு வழங்க இந்தியா இருக்கிறது என்று அரேபிய நாடுகளிடம் கெத்து காட்டி கொள்ளலாம். கடைசியில் இந்தியாவிற்கு தடை விதித்த அமெரிக்காவே, இந்தியாவிடம் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வாங்கத் தொடங்கியது.

இந்தியாவிடம் அமெரிக்கா பெட்ரோல், டீசல் வாங்குவதை கண்டதும் பாகிஸ்தானுக்கு பற்றி கொண்டு வந்தது. இதேபோல் கச்சா எண்ணெய் வாங்கி பாகிஸ்தானில் சுத்திகரித்து எடுத்துச் செல்ல அமெரிக்காவை கூப்பிடத் தொடங்கியது. பாகிஸ்தான் எவ்வளவோ கூவி கூவி கூப்பிட்டும் எந்த ஒரு ஐரோப்பிய நாடும் திரும்பி கூட பார்க்கவில்லை.

அதுதான் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் உலகநாடுகள் கொடுக்கும் மரியாதை. உண்மை, நேர்மை, நம்பிக்கை இதற்கெல்லாம் பெயர் போனது பாரதம். அது கிஞ்சித்தும் இல்லாதது பாகிஸ்தான் .

ஆக இன்று பெட்ரோல், டீசல் ஏற்றுமதியில் நம் பாரதம் உலகின் நான்காவது பெரிய நாடு. நம்மிடம் பெரிய எண்ணெய் கிணறுகள் இல்லை, உற்பத்தி இல்லை. ஆனால் பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய இடம் என்பது எவ்வளவு பெரிய சாதனை. நினைத்து பார்க்க முடியாத சாதனை இது. இது நம் வெளியுறவு கொள்கையால் மட்டுமே சாத்தியமானது. மோடிஜி தலைமையால் மட்டுமே சாத்தியமானது. ஆனால் அதை இங்கே சொல்லக் கூட ஒரு தெளிவான அரசியல்வாதிகளும், தொண்டர்களும் பா.ஜ.க.,விடம் இல்லை என்பது வேதனை. இப்படித்தான் மோடி அரசின் சாதனைகள் ஒவ்வொன்றும் மண்ணில் புதையுண்டு கிடக்கும் மாணிக்ககற்கள் போல புதைந்து கிடக்கிறது.

Tags

Next Story
கடம்பூரில் வெடிபொருட்கள் பதுக்கிய 5 பேரை கைது செய்த போலீஸ்!