ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தடுக்கும் ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தடுக்கும் ஏவுகணைகளை வாங்குகிறது இந்தியா
X

(பைல் படம்)

அதிவேக ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வழிமறித்து தடுக்கும் அதிநவீன இஸ்ரேல் ஏவுகணைகளை இந்தியா வாங்குகிறது

இஸ்ரேல் உலகை அதிர வைக்கும் அறிவிப்பு ஒன்றை செய்துள்ளது. அது ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் அதாவது ஒலியினை விட 5 மடங்கு வேகமாக செல்லும் அந்த ஏவுகணைகளை தடுக்கும் சாதனத்தை தயாரித்ததாக சொல்லி அதிர வைக்கின்றது

இன்றைய தேதியில் உலகின் மிக வேகமான ஏவுகணை ரஷ்யாவின், ஹைப்பர்சோனிக் ஏவுகணை மட்டுமே. இதனை தடுக்க இதுவரை வேறு ஏவுகணைகள் கண்டறியப்படவில்லை எனவும் ரஷ்யா அறிவித்திருந்தது. ஆனால் உக்ரைன் யுத்தத்தில் ரஷ்ய ஹைப்பர்சோனிக் ரக ஏவுகணைகளை அமெரிக்க பேட்ரியாட் எளிதாக வீழ்த்தி வருகிறது. ஆனாலும் அந்த சோதனையில் முழுமையான ஒரு வெற்றி கிடைக்கவில்லை. எனவே அமெரிக்காவின் பேட்ரியாட் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஈரான் தங்களிடம் ஹைப்பர்சோனிக் ஏவுகணை உண்டு, 400 செகண்டில் இஸ்ரேலை அழிப்போம் என கொக்கரித்தது. இதற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் முடிந்தால் எங்கள் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை வீசிப்பார். அந்த ஏவுகணையினை வழிமறித்து உன் நாட்டு எல்லைக்குள்ளேயே, அதாவது உனது நாட்டை விட்டு வெளியேறும் முன்பே வீழ்த்தி காட்டுகிறேன் பார் என சவால் விட்டுள்ளது. இஸ்ரேல் சொன்னதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். இது உலக நாடுகளுக்கு தெரியும். நாங்கள் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளை வழிமறித்து அடித்து அழிக்கும் ஏவுகணைகளை தயாரித்து சோதித்து பெரும் வெற்றியை ஈட்டி விட்டோம் என்ற இஸ்ரேலின் அறிவிப்பினை கண்டு உலகமே அலறிக் கொண்டுள்ளது.

இதுவரை நடந்தது புரிகின்றதா? இனி இந்தியாவிற்கு இதனால் என்ன பலன் என பார்க்கலாம். ரஷ்யாவும், சீனாவும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை தயாரிக்கும் போதே, இஸ்ரேல் சுதாரித்தது. ஏனெனில் ரஷ்யா, சீனாவின் ஏவுகணைகள் முதலில் வடகொரியா செல்லும். அங்கிருந்து ஈரானுக்குள் வரும் என இஸ்ரேலுக்கு தெரியும்.

அதனால் ஈரானிடம் ஹைப்பர்சோனிக் ஆயுதம் வரும் முன்பே அதன் தடுக்க தயாராக வேண்டும் என்று சுதாரித்த இஸ்ரேல், தடுப்பு ஆயுதத்தை தயாரித்து தனது எல்லையில் நிறுத்தி விட்டது. எப்படிபட்ட முன்னெச்செரிக்கை இது?

இதுதான் இந்தியாவுக்கு சாதகமானதாக மாறி உள்ளது. அதனை பார்க்கலாம். அமெரிக்க பாக்கிஸ்தானை ஆதரிப்பது போல் தெரிந்தாலும், தனது மிகவும் வல்லமையான, மிகவும் அபாயகரமான ஆயுதங்கள் எதையும் பாகிஸ்தானுக்கு கொடுக்காது. ஆனால் சீனாவும், ரஷ்யாவும் அப்படியில்லை. தங்களது தயாரிப்புகளை பாகிஸ்தானுக்கு தாராளமாக கொடுப்பார்கள். இந்த நாடுகள் மூலம் தான், பாகிஸ்தானுக்கு இதுவரை அணுகுண்டு உட்பட எல்லா ஆயுதங்களும் கிடைத்தன. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகளும் இனிமேல் அப்படித்தான் பாகிஸ்தானுக்கு கிடைக்கும். காரணம் பாகிஸ்தானுக்கு ஆயுதம் கொடுத்தால் தான், இந்தியா தனது பலத்தை அதிகரிக்க நம்மிடம் வந்து நிற்கும் என ரஷ்யா ம்பி வந்தது. இதுவரை அது தான் நடந்தது. இப்போது இருக்கும் இந்தியா மோடியின் இந்தியாவல்லவோ. இந்த இந்தியா ரஷ்யாவினை புரட்டி போட்டு விட்டது.

பாகிஸ்தானுக்கு வலுவான ஆயுதம் கொடுத்தால், பழைய இந்தியா என்றால் ரஷ்யாவிடம் பாதுகாப்பு சாதனம் எஸ் 550 கேட்டு மண்டியிட்டு கதறியிருக்கும். ஆனால் ரஷ்யாவோ, இந்தியாவை கண்டுகொள்ளாமல் சீனாவுக்கு முதலில் கொடுத்து விட்டுத்தான் இந்தியா பக்கம் வருவார்கள். அதுவரை நாம் வரிசையில் காத்திருக்க வேண்டும்.

மோடி அரசில், அதாவது மோடியின் இந்தியாவில் இந்த சிக்கலெல்லாம் இல்லை, இனி இஸ்ரேல் தயாரிப்பு சில மாதங்களில் இந்தியாவுக்கு வந்து விடும். மோடி இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்கும் உள்ள நட்பு அப்படிப்பட்டது. உலகை திரும்பி பார்க்க வைத்த இஸ்ரேல் தன் சாதனத்துக்கு "ஸ்கை சோனிக்" என பெயரிட்டிருக்கின்றது. இந்த ‘‘ஸ்கை சோனிக்’’ விரைவில் இந்திய எல்லையிலும் வந்து காவலுக்கு நிற்கப்போகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!